Saturday, April 21, 2012

பெரு வெடிப்புக்கு அப்பால் ஒரு தருணம்,ஒரு கணமேனும் வழுகி இருந்தால் நேராத பிரபஞ்சத்தை குமய்ந்தவாறு அழுக்கை தின்னும் மீனை தின்னும் கொக்கை தின்னும் மனிதனை தின்னும் பசி என்று பொயட்டு கலாய்ப்பானா?
அவிழ்ந்த ஒரு பாறை முடிச்சில் நீர் கொட்டுகின்ற எளிமையான கரடிக்குகையில் ஒருவேளை கடவுள் கூட இளைப்பாறிக்கொண்டு இருக்கலாம். இருந்தாலும் தோஸ்த், இப்ப நான் இருக்கற ஜென்மாந்திர மேஜிக் ஷோ மேடைல இருந்து எறங்குன பெறகு தானே அங்க போவ முடியும்?

புயலில் ஒரு தோணி


காரளக பெண் சிகாமணியே ! நான் மந்தையில் இருந்து விலகி பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும் , பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி , இந்த பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி , ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன் ; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.


சரிதான், சொல்லி என்ன இருக்கிறது? சொல்லி சொல்லி பெருகிய வனத்திலும் எரியத்தானே வேண்டும் அந்த நிலவு?
சரிதான் , சொல்ல என்ன இருக்கிறது? சொல்ல முடியாமல் பெருகிய வனத்தில் எரியட்டுமே அந்த நிலவு?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று நசநசக்கிற உலகத்துக்கு பயந்தால் அப்புறம் முகமூடி தான்.