Thursday, July 26, 2012

உறவுக்கு கை கொடுத்து
உரிமையை எல்லாம் விட்டுக் கொடுத்து
எப்பவும் போடோக்கு சிரித்து
எல்லாருக்கும் அழைப்பு விடுத்து
நட்பும் சுற்றமும் சூழ
வாழ்வாங்கு வாழ்வதற்கு நடுவே
எப்பவும் வெளயாடறோம், இல்ல
சும்மா

இருந்தாலும் இருந்துக்கிட்டிருக்கு
கத்தி.

Tuesday, July 17, 2012



முன்ன எல்லாம்
சதுரவட்ட கிராப்பு ஜிப்பா
ஹிப்பித் தல கலஞ்ச தல
ஸ்பன்னு சோலாப்பூர்
ஹவாய்
சுஜாதா பாலசந்தர்
கம்யுனிசம்
ஏமாந்தா ஒரு ஓரமா
ஜீன் பால் சாத்தரும்
கூட

கொஞ்ச நாள் முன்ன கூட
மனிதாபிமானத்த வச்சுகிட்டிருந்தமே சார்

இப்ப
நேர்மை.

Saturday, July 7, 2012




நீ எவ்வளவு அழகு தெரியுமா என
காக்கையை
பாட்டு பாட சொல்லிக் கேட்ட
நரி வயிற்றில் ஊறிய
பசி
குளவிக்குள் குருவிக்குள்
குடல் புரளும் சகல ஜீவனுக்குள்
பற்றிப் பரவி
வளர்ந்து நின்று
வனமேகிய வரிப்புலியாய்
உலவுவது பார்ப்பாய் எனில்
என் பசியை எப்படி வெறுப்பாய்



கூனனின் முதுகு போல
ஒட்டிக் கொண்டிருக்கும் வாழ்வு விழைவது
கொஞ்சம் அல்பத்தனங்களை மட்டுமே

மலையை புரட்டி தள்ளிக் கொண்டிருந்த
போதும்

கூட்டில் இருந்து விழும் தேன் சொட்டு போல்

பூவின் பேரை யோசிக்கு முன் எரிகல் மறைவது போல்

கண்களை பிளந்து உன்னை விழுங்கத் துடிக்கும்
இக்கணம்

நாளை காற்றில் ஆவியாகிப் போகும்
மது.


 

Wednesday, July 4, 2012






இந்த நகரம்
யார் இதன் உடமையாளன்
கண்காணிப்பாளன்
இந்த விசை எங்கிருந்து
கிளம்பி சென்று
நிலக்கடலை விற்று கோடீஸ்வரன்
நடிகனாகி முதல்வர்
ஆள் பிடித்து கொடுத்து ஆள்
ஒரு எல்லுக்கு ஒரு கொலை
பொறுக்கி இல்லையா போலீஸ்
ஆன்மீக பேரருளுடன் சைய்டில்
பெண்வணிகம்
பொந்துக்கு வெளியே இருக்கும்
பனிக்காட்டில் பூந்து
நான் யாராகவும் திரும்பலாம்,
நீ யாராக நிற்கிறாய் சொல்லி விடு