Monday, September 24, 2012



காலம்
தன் சந்தை வாயை பிதுக்கி
எல்லோருக்கும் பெயர் வைக்க வரும்

புரிதலின்மையின் கொடுங்கானகத்துள் நழுவி
யாரும் காணாத மரங்களில் எழுதுகிறான்
ஒரு கோழை.

ஆ, இருந்தாலும்
எமக்கு தொழில் கவிதை.
 

Tuesday, September 18, 2012




 சிகரெட்டு பீடி குடிச்சா
எளுத்து
பாட்டில தொறந்தாலும்
அதே தான்
கெட்ட வார்த்தைக்கு மியுட்டு   
நல்ல கருத்துக்கு டேக்ஸ்ப்ரீ 
லண்டன் பேலசு
ராஜதந்திரிகளோடே
பரிசாகரனா இருந்து
நாங்க திருடறதுக்கு வெளக்கு புடி
நாங்க கொளுத்தறதுக்கு மோளம் அடி 

Thursday, September 6, 2012

நிலைக் கண்ணாடியில்
ஒரு ஆட்டை சிருஷ்டித்து
ஜென்டி மேனின் புன்னகை
சொற்கள், கட்டம் கட்டமாய்
சொற்கள், சொற்கள் உச்சரிப்பு சுத்தத்துடன்
ஓங்காரம்
வரிக்குதிரை போல சீருடை
ஒரு குடம் பெருமிதம்
ஒரு தம்பளரில் அசடு
பத்தாமே போனாக்கா

ஓநாய் கண்ணீர்

வேட்டையாட இதெல்லாம் வேண்டும்
விரும்புவதற்கு என்ன வேண்டும்
எப்ப பாத்தாலும்
என்னப் பத்தி தெரியுமானு
சொறிஞ்சுகிட்டே இருக்கான்
நோபிள்

மாடு மாதிரி
நிக்கற புலியா

சரிடா
நான் உன் முதுக வருட
கிளம்பி வந்தாச்சு.

முனகினாலும் சரி
முழுங்கினாலும் சரி