Monday, December 4, 2017






வாயிலில் வந்து நின்று
கரகரப்பான குரலில் கதவை இடிக்கிறது
திகுதிகுவென பெருகும் சிரிப்பை
உருட்டி விளையாடுகிறது நித்தமிந்த
அசுரம். ஒரு சிட்டிகையில் புறாக்கள்
எழுவது போல
பயம். ஒரு இமைப்பில் கண்ணுள்
மின்னிட்ட நிறம். ஒரு கனவில் வெளிறிட்ட
வாழ்வு. ஒரு ரோகியில் வெளியேறிய
தெய்வம். ஒரு சிசுவின் புன்முறுவல்
துப்பாக்கி.


தம்பி, பரோட்டாவை திருப்பிப் போடு.


நாலு நாள் பேப்பர் படிக்கல
மொத்தத்தையும் கொண்டாந்து வை.


வண்டிய தொடச்சியா.


பத்து அஞ்சுக்கு அந்த கட் அவுட் முதுகு
எதிர வரும்.




அவர் நடுத்தரம்
ஐரிஷ் தொப்பி அணிந்திருக்கிறார்
தொப்பையுண்டு, வழுக்கையும்
இருக்கலாம்
முறுக்கின மீசையில் புன்னகை
தெரியாது
முச்சந்திப் பிள்ளையாரின் முன்பு
கலகப் பிரங்ஞையின்றி தோப்புக்கரணம்
போடுகிறார்
கடன் தொல்லை?
உப்பு புளி மிளகாய்?
அலுவலக நெருக்கடி ?
உறவுகளின் இளக்காரம்?
சொல்ல முடியாது, கள்ளக் காதலி
நெக்லஸ் கேட்டிருக்கலாம்
மனைவியின் காதலன் தள்ளிப் படு
என்றிருக்கலாம்
அட விடு, நல்லவனாய் இருக்க முடியாத
தளர்வுமாகலாம்,
அநீதிக்கு கைவேலை செய்ய முடியாத
பிரமிப்பாயிருக்கலாம்.

கேட்டாயா சகா
நான் சொல்ல வரும் நீதி 
ரத்தத்துக்கு மட்டுமில்லை
நிறம், துக்கத்துக்கும் ஓன்று தான்.
         

Monday, November 13, 2017





பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நமக்கு
எட்டாக் கரையில் எட்டும் முன்னே
இந்தத் திட்டில் வைத்து ஒரு மதுக் குப்பி
திறந்தாலென்ன, வாழ்வை ஏந்தி கிண்ணம் மோதி
ஒரு மிடறில் சிரித்த பிறகு அதில் விஷம்
கலந்தால் தான் என்ன. எட்டிப் பார்த்தும்
தொட்டுப் பார்த்தும் அறிந்த பின் அறிந்தேன்
எனது முலைக் காம்பின் விளிம்பு
எவளுக்குமில்லை என்கிற செருக்கை
அணைத்தாலென்ன, அல்லது இழுத்து வைத்து
அறைந்தாலென்ன. குருடனுக்கு கண்,
கடவுளுக்கு இதயம். இருப்பவர் எவருமே
இல்லாதது தேடும் துயர். எரிகிற புண்ணில்
பறக்கிற புகை. சரியாய் வந்திருக்கிறதா சொல்
எக்சிஸ்டென்ஷியலிசம்.

விஸ்கி குடித்திருந்தேன்
எனக்கு ஊற்றாதே, ரம்மை கலக்க
முடியாது,

sorry.




   

         

Friday, October 27, 2017





சட்டிக்கு கழுத்து வனையும் விரல்களின்
மனம் அறியாதது போல தான், கவிதையின்
நாபியில் முத்தி விட முடியாதது போல தான்
ஆகாயப் பந்தல்களின் பொன்னுஞ்சல்கள் இருக்கின்றன,
அவனன்றி அவர்கள் அறிய முடியாதிருக்கும் ஒரு
கத்தி.


மனம் தித்திக்கையில் நெய் மணக்கிறது, முந்திரிகள்
புன்முறுவலிக்கின்றன. நானிருக்கும் காட்டில் ஒவ்வொரு பூவிலும்
அந்த திராவகம் சவால் வைக்கிறது, இப்போது ஒரே ஒரு சொல்லுக்கும் அஞ்சுகிறேன். நீ ஒரு அழகி என்றால் முடியுமா. உன்னோடு படுக்க வேண்டும் என்றால் முடியுமா.உன்னை கொலை புரிந்து நீ கண்கள் பிதுங்க விடுபட்டு போவது மூச்சை சகஜமாக்குமா


புரிந்து கொண்டு விட்டேன் ஒரு அளவில். தீ எங்கும் உள்ளது.
ஒரு சதையை ருசிக்கும் போதமாகவே தீயை வாழ முடியும்.
நாமறியாத ஒருவன் நாமறியாத திசைக்கு நடக்க தேடும் போது
அவனது நாகரீகம் நாம் ஒளித்த தீயில்
துவங்கும்


ஆமாம், இப்படி ஒரு பிரார்த்தனை கிடையாது.
இதைக் காட்டிலும் ஒரு தண்டனையும் கிடையாது.


Friday, October 6, 2017






ஜன்னலுக்கு வெளியே மார்கழி பனி
வீட்டினுள் அசைகிற கற்பூர பிரமை
விடிந்து வந்தவாறிருக்கிற வெளிச்சத்துடன்
தெச்சி மந்தாரம் துளசி பி லீலா
கண்களால் பேசுபவளும் கருப்பியுமான
அந்த டியூஷன் மிஸ்ஸின் ஆங்கில அதட்டலுக்கு எதிரே
குளித்து சுந்தரக் குட்டனாய் குட்டியாய்
இருவர்
பதிமூன்று வயதுக் கண்கள் பார்த்த நெஞ்சம்பற்றி
சொல்ல முடிந்தால் தானே
பதிமூன்று வயது நெஞ்சம் பார்த்த
குறுமுலைகள் பற்றி சொல்ல முடியும்
என்று கேட்கிறான் அவன்.

நாஷ்டால்ஜியா ஏன் இவ்வளவு
தொப்பலாய் இருக்க வேண்டும் என்பது அவன் கேள்வி. 

Saturday, September 23, 2017




மிக சாதாரணமாய் பூனையொன்று
நம்மை பார்த்தவாறு கண்களை மூடித் திறப்பது போலவே
அது படியேறி வந்து முற்றத்து நாற்காலியில்
அமரும், தலைவரின் சிலையில் செருப்பு மாலை போட்டு
ஊரை எரிய செய்கிற திட்டம் மாதிரி
அது யாருடனும் தெருவில் அலையும்
ஒரு துண்டு ரொட்டிக்காக ஆனான தேசமெல்லாம்
நொறுங்கிய கதையை சொல்லவே வேண்டுமா
ஆங்காங்கே கிழித்தது போக
எல்லாவற்றிலும் பட்டு தெறிக்கிறது
பகை. உள்ளோடியொளிந்த
பெருச்சாளிகளாயிற்று நிஜம். இடையே
நாகரீகத்தை இஸ்திரி போடுகிற பிழைப்பு.

ச்சை- வரியான்னு உன்ன கேக்கறதுக்கு நடுல
பல்லாயிரம் வருஷ பள்ளம்.







Friday, September 22, 2017




சன்னலுக்கு வெளியே அங்கே
ஒரு பறவை கிரீச்சிட்டு தேய்ந்து
மறைந்தவாறு இருக்கும் போது
இன்று அருவிக்கு செல்வதில்லை, விவாகரத்து
ஹியரிங் பற்றி கேட்க வேண்டும், ஷேவிங் லோஷன்
இல்லை, மீரா போனில் என்னவோ கிசுகிசுத்தாளே, இந்த விஸ்கியும்
மறதியும் என்ன சொல்ல, அடுத்த முறை
வனாந்திரத்துக்கு இப்படி தனியே வரக்கூடாது,
ஜூட் இருந்தால் சண்டை இழுத்து பொழுது போகும், ஆம்,
அடுத்த முறை நீ ரொம்ப நேரம் செய்ய வேண்டும்
என்று சொன்னாள், புது ஷூ ஓன்று வாங்கிக் கொள்வோமா,
மின்சாரம் தடைபடாவிட்டால் மின்மினிகள்
மினுங்கி பறக்கா விட்டால் அவள் இதழ்களிலேயே
இருக்க முடியுமே அரை மணி நேரம், மகளே
லாலிம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய்

ஷட் அப் .

பள்ளத்தாக்கின் அமைதியெங்கிலும் விம்முகிறது
நூறாயிரம் பறவைகளின் ஹோ.

Monday, September 18, 2017




காலம் மரவட்டைக் கால்களில் நடந்தாலும்
திருப்பத்தில் மறிக்கிற பாறைக்கு முன்
திகைக்கும், அடியே முடிந்ததெல்லாம் சொப்பனமா
நேற்று கடலில் இறங்கிய சூரியன் தானே
இப்போ உச்சந்தலையில் முள் குத்துகிறது
உனது மகளுக்கு என்ன பெயர்
உனது பெயரின் எழுத்துக்களின் எதிரொலி
முடியும் முன்னே யாருக்கு பூ மலர்த்தி
எப்போது இவளை சறுக்கலில் இறக்கினாய்
சரிதான், இந்த மயங்கலில் ஒளிவருடங்கள்
பொடிக்கின்றன
கடவுளே அதோ காட்டுப் பன்றி போல
புழுதி கிளப்பிப் பறக்கிறான்
நல்லாள் நீ நூறு முறை சோரம் போய்
தகித்த தங்கத்தில்
நான் உலகடைந்திருக்கிறேன்
ஐ லவ் யூ பேபி என்பதாகவே திரும்பவும்
துவங்கவா.

Monday, August 28, 2017



தனிமை
அவன் அதை கனம் பண்ணிக் கேட்டதில்லை
யாரோ கைவிட்டு செல்வதில்லை
யாரோடும் இல்லாமல் இருப்பதில்லை
துண்டுபட்ட கண்டங்கள் மீது
வெண்பனி நழுவும்
விஸ்கி கோப்பையை தான்
வெறித்துக் கொண்டிருப்பதுமில்லை
நெஞ்சில் இருந்து ஏறி
தொண்டையடைத்து
வெடிக்காத குமிழி மச்சான்
என்பான்

ஆயுளுக்கும் ஆவியுலர காத்திருந்த
பொன்னுங்கட்டி முத்தமிடும் போது
துடைத்துக் கொள்ளுவது
தனிமை

அது கடவுள் நகர்த்தி உக்காரு என்ற
நாற்காலி.

Monday, August 7, 2017




ஒருவேளை நகர்ந்தால் மட்டுமே
துலங்கும் சூரியோதயம் போல
சில கண்கள்
உள்ளுக்குள் பேசும்போதும்
உள்ளாடை மாற்றும் போதும்
அடித்துப் பார்த்தவாறு இருக்கின்றன
ரகசியங்களை பரிகசிக்கின்றன
கீழே, கீழ்மையின் சுழிதலை
பெற்றெடுத்த மக்கள் போலும்
சகிக்கின்றன, சகஜமாக்குகின்றன
ஒரு மின்னல் வெட்டின் இடைவெளியில்
வேறு கண்களுடன் சென்றுவிட்டவர்
பற்றி எந்த செய்தியும்
இல்லை.


Thursday, August 3, 2017





அவள் அவளை
அணுகும் போதெல்லாம்
அதே மணம் எழுந்து வரும்
அவனது பித்து கிளர்ந்து வரும்
அடுப்பில் இருக்கிற கறிக்குழம்பை
அவன் சப்பு கொட்டுகிற சப்தம் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்


ஒரு நாடகத்திலும் இல்லாத வசனம்,
எல்லோரும் இறந்தொழியுங்கள்.




அவள் அவளை
அலம்பும் போதெல்லாம்
அந்தக் கலவி நினைவு வரும்
அவனது கண்கள் நினைவு வரும்
அவை என்னை கை விட்டு விடாதே என்பதாய்
அத்து மீறியது கொதிப்பாய் வரும்
முகத்தில் தாடையில்
இதழ்கள் என்பார்களே அதனோரத்தில்
குறுஞ்சிரி வருவது தான்
இயங்கும் எவனையும் தளர்த்தும்
மந்திரம்.

ஒரு நாடகத்தின் வசனம் போலவே,
உலகின் நெஞ்சினுள் எரியும் தீக்கொழுந்து
நான் !

Monday, July 3, 2017





உங்கம்மா பூட்ட
உங்கப்பா சாவி வெச்சு
திறப்பதை பார்த்திருக்கிறாயா
என்றான்.
அஞ்சும் அஞ்சும் பத்து வயசு
ஆறாம் வகுப்பின்
கடைசி பெஞ்சில் கண்கள் விரிய
கலவிக் கல்வி
நடுவில் இப்ப தான்
நாற்பது வருஷம் நழுவிப் போச்சு
சாவியொன்று உண்டு என்னிடம்
பூட்டை திறக்க வரலாமா
என்று இன்னமும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அதனால் தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்கிறது
தமிழ் சினிமா.

Saturday, June 17, 2017







எல்லா பொருட்களையும் வாங்கி விட்டேன். வீட்டிற்கு சென்று கொண்டுமிருக்கிறேன். என்னவோ ஓன்று போதாமல் மனதில் இடையூறாய் இருந்து கொண்டிருக்கிறது. வாகன நெருக்கடிகளில் சாலையை கடக்கும் போது கோமதி முகம் மின்னி விட்டது. மும்பையில் பார் ஒன்றில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிறாள். மன்னிக்கவும். கண்ணியம் தாண்டி விட்டேன். கோமதி என் மனைவி தான். ஹோலி ஏஞ்சல் என்கிற பெயரில் கிளப் டான்சராய் இருக்கிறாள். மூன்று நாளைக்கு ஒரு முறை அவளுக்கு நள்ளிரவு பணி. ஆகவே இந்த நேரத்தில் தொலை பேசியாக வேண்டும்.

சொல்லு, கிஷோர். மினி என்ன சொல்கிறாள்?

என்ன சொல்லுவாள்? கோடை விடுமுறை முழுவதும் நீ அவளோடு இருக்க வேண்டுமாம். தினமும் கட்டிப் பிடித்து உறங்க வேண்டுமாம்.

நகைப்பது கேட்டது. சிறு அமைதி.

கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடு கிஷோர். ஓத்துக் குடிச்சிட்டு மங்களம் பாடிடாதே.

தப்பான சொற்கள். எனக்கு கோபம் வருகிறது. என்ன களைப்பாக இருக்கிறாயா என்கிறேன். இல்லையே என்று முடிப்பதற்குள் மானேஜர் கூட படுத்திருப்பாய் என்று விட்டேன்.

மானேஜர் ஊரில் இல்லை

மன்னித்துக் கொள். கோபத்தில் சொல்லி விட்டேன்

அந்த ஒரு ஆளுக்கு பதிலாய் மூன்று இளைஞர்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள். பயில்வான்கள் என்று வைத்துக் கொள்ளேன். ஒருவன் முன்னால். ஒருவன் பின்னால். ஒருவன் வாயில். சரியான ஆட்டம். தண்ணீராய் பொங்கி வழிந்து முடிந்து விட்டேன். உன்னால் என்ன செய்ய முடியும்?

அப்புறம் வழக்கம் போல அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதானம் செய்ய ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. நீ நம் குடும்பம் பொருட்டு எரிகிற மெழுகுவத்தி என்கிற கணக்குக்கு தான் அடங்கி வந்தாள். அதற்குள் யாரோ ஒரு வேசி மகன் அழைக்கும் குரல் கேட்டது. ஜமீலா அழைக்கிறாள் என்று அவள் சொன்ன பொய்யை கசக்கியவாறே வந்து சேர்ந்தேன். நல்ல வேளை, மினி படுத்து விடவில்லை. நான் வருவதை அறிந்து படிப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள். நான்காம் வகுப்புகாரி. ஆடைகளை கழற்ற சொல்லி குப்புற படுக்க வைத்தேன்.  இடுப்பில் புட்டத்துக்கு மேல் ஒரு சிறிய துண்டு.

அச்சா

என்னம்மா

உனக்கு படிக்க வரவில்லை. ஏதாவது வீட்டு வேலை செய்து பிழைப்பை பார் என்று சொல்லுகிறாள் ஆசிரியை. இன்று மட்டும் நான்கு அறை அறைந்தாள்.

ஓ, பார்த்துக் கொள்கிறேன்.

இது ஆலிவ் ஆயில் மசாஜ். நெற்றியில் இருந்து கால் விரல்கள் வரை கனிய கனிய செய்ய வேண்டும். மார்புகளுக்கும் புட்டங்களுக்கும் நன்றாக நேரம் எடுத்துக் கொள்ளுவேன். மினிக்கு இந்த நேரம் தூக்கம் சொக்கிக் கொண்டு வரும். முடிந்த உடன் எழுப்பினேன். கண்களை திறந்ததும் அவள் வைன் குப்பியை தான் பார்த்தாள். மிகவும் பிடித்தமான அந்த நூறு மில்லி வைனை சப்பிக் கொண்டு விழுங்கினாள். கொறிப்பதற்கு எதுவும் வேண்டாம். நல்ல சுடு நீரில் குளிக்க வைத்தேன். பசியுடன் கோழிக்காலை கடித்துக் கொண்டு பிரியாணியை தின்றாள். உறங்கி விட்டவளின் கையை வாயைக் கழுவி ஏ சி யில் படுக்க வைத்தேன். மென்மையான ஒரு போர்வையை எடுத்து மார்பு வரை போத்தி விட்டேன்.    

பையனை தேட வேண்டியிருந்தது. இரண்டாம் வகுப்பு ஆள். அவனை விட பெரிய பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தவனை மீட்டுக் கொண்டு வந்து சோறு போட்டு தூங்க வைத்து மாடிக்கு வந்து சேர்ந்தேன். எல்லோரும் மூன்று பெக்குகளை தாண்டி விட்டிருந்தார்கள். குடித்திருக்கிறவர்களில் ராம ஜெயம் தான் சர்வ நிதானத்துடன் இருந்தான். என்னைப் பார்த்த உடன் ஒரு கோப்பையை என்னிடம் திணித்து விட்டு கட்டிக் கொண்டான்.

கிஷோர். நான் காதலில் விழுந்து விட்டேன், யாராவது சொன்னார்களா?

எழுந்து விட்டாயா, இல்லையா?

காதல் ஒரு பயணம். சொர்க்கத்தில் இருந்து நரகத்துக்கும், நரகத்தில் இருந்து சொர்கத்துக்கும் போனவாறு வந்தவாறு இருத்தல். சில நேரம் தலை மயிர் பறக்கிறது. சில நேரம் உயிரே பறந்து காணாமற் போய் திரும்பி வருகிறது. அடுப்பில் வைத்த பாலாய் கொதித்து வெளியேறிக் கொண்டிருக்கிறேன்.

ராம ஜெயம் ஒரு கல்லூரி மாணவன். கீழே, நான்கு வீடுகள் தள்ளி இருக்கிற முருங்கை மர வீட்டில் இருக்கிற கவிதாவை இவன் விரும்புகிறான். அவளும் கல்லூரி படிக்கிறவள் தான். சொல்லப் போனால் நாளை பிற்பகல் இரண்டு முப்பதுக்குள் அவள் கல்லூரி கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். அவளது அக்கா சினிமா படப்பிடிப்பில் தட்டு கழுவுகிறவள். உன்னால் பணம் கட்ட முடிந்தால் நீ படித்துக் கொள்ளலாம் என்கிற சலுகையை கொடுத்திருக்கிறாள். கவிதாவிற்கு பணம் வேண்டும், பெருமூச்சுக்கு பிறந்த ராம ஜெயம் கொடுப்பானா?

பணத்தை ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

காலையில் ஒரு வாடகைக் காரை பிடித்துக் கொண்டு ஸ்டுடியோ பக்கம் வந்து விட்டோம். போன முறை மாதிரி இல்லாமல் இப்போது கவிதா கொஞ்சம் பதட்டமாய் இருந்தாள். நான் ஆற்றுப்படுத்தினேன். தொலைபேசியில் விவரத்தை கூறிய மறு வினாடியே பாண்டியன் அண்ணன் வந்தார். படப்பிடிப்பு நடக்கிற இந்தப் படத்திலும் நடிகர் ஹரிஹர்க்கு உடை வடிவமைப்பாளராக இருக்கிறார். மூவருமாக போனோம். நடிகர் எங்களிடம் நட்புரீதியாய் புன்னகைத்து விட்டு கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார். நான் கொஞ்சம் அதிகமாகவே உடலை வளைத்து நான் உங்கள் அடிமை என்பதை தெளிவுபடுத்தினேன்.

ஒரு இடைவேளை கிடைத்தது. எனக்கு மாதுளம் பழ பானம் கொடுத்தார்கள். நன்றாய் குளிரிட்டிருந்தது. அசாத்தியமான சுவையும் கூட. மினிக்கு மதிய வேளைகளில் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முன்னரே திட்டம் போட்டு வைத்திருந்தேன். நடிகருடன் காரில் சென்று வெறும் ஐந்து நிமிடத்தில் நான் பானம் குடிப்பதற்குள் திரும்பி வந்து விட்ட கவிதா சோடா வேண்டும் என்று கேட்டாள். வந்ததும் முழு சோடாவினாலும் வாயைக் கொப்புளித்துக் கொண்டாள். அண்ணன் தாமதிக்காமல் கொண்டு வந்த பணத்தில் நான் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மிச்சம் அவளிடம் கொடுத்து ஓட சொன்னேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. கல்லூரியில் பணம் கட்டி விடலாம்.

இன்று இரவும் கவிதா மீது உள்ள காதலை ராமஜெயம் முழங்கிக் கொண்டிருக்கிறான். இந்த ராணி தெருவில் இல்லாத வேசித்தனம் இல்லை. நெருப்புக்கு நடுவே தெய்வம் போல அவள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள், உன்னால் இல்லையென்று சொல்ல முடியுமா என்று என்னை சவாலுக்கு அழைத்தான். இதெல்லாம் சகஜம் தான். உலகில் இப்படி எல்லாம் பல பேர் காரியம் அறியாத குழந்தைகளாய் தான் இருக்கிறார்கள். நான் அவனை தடவிக் கொடுத்து தீவிரமாகவே கவிதா நல்லவள், அவளை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேர்மறை உத்வேகம் கொடுத்தேன். ஒரு நண்பனாய் அது என் கடமையுமாகும்.

அப்போது தான் ஒருவன் வந்தான்.

அறிவழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாராம். உங்களுக்கு தெரியும். அவர் பிரபலமடைந்து வரும் ஒரு நடிகர். அரசியல் சார்புள்ளவர். நாளைக்கு முதல்வராகக் கூடிய ஒருவருடைய மகன். என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் ஒரு மனைவி இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பஸ்தராய் இருந்த போதும் நடிகை மிருதுளாவை காதலித்துக் கொண்டிருக்கிறார். திரைப்பட துறையினர் அத்தனை பேரும் மூன்று மாதங்களாய் பேசிக் கொண்டிருக்கிற ரகசியம் தான் இது. மனைவி குழந்தைகளை கைவிட்டுவிட்டு தனியாய் வந்து விட்டார் என்றும் இன்றோ நாளையோ மிருதுளாவின் கழுத்தில் திருப்பதியில் வைத்து தாலி கட்டி விடுவார் என்கிற செய்தியை எதிர்பார்த்திருந்தோம்.

அவள் எப்படி தான் அந்தப் பச்சை துரோகத்தை செய்தாளோ? நான் உன்னை விரும்பியதே இல்லை என்று அடித்து சொல்லி இருக்கிறாள். அறிவழகன் ஐயாவின் மனம் பஞ்சு போன்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம், இல்லையா? விஷம் குடித்து படுத்து விட்டிருக்கிறார். உயிர் திரும்பக் கிடைக்குமா இல்லையா தெரியவில்லை.

எல்லோரும் கொதித்தார்கள்.

தேவடியாள் பெற்றெடுத்த திருமகள் என்றான் ராம ஜெயம். கேரளாவில் இருந்து நடிக்க வந்து, ஆள் மயக்கி வேலை செய்து நல்லவர்களை கொன்று கொண்டிருக்கிறாள். விட்டு வைக்கலாமா? எனக்கு மட்டும் ஒரு  வாய்ப்பு கிடைத்தது என்றால் இப்போதே சென்று அவளது சூத்துகளை அறுத்துப் போட்டு விட்டு வருவேன் என்று உறுமினான்.

 நான் நிதானித்தேன்.

ஒரு காலத்தில் நான் அழகன். ஊரில் இருந்து மாடு போல உழைத்து மிருகம் போல வாழ பிடிக்காமல் நகரத்துக்கு வந்தேன். கமல ஹாசனைப் போலவோ, ரஜனி காந்தைப் போலவோ திரையில் உதித்து விட முடியும் என்கிற கனவு தகர்ந்து, ஒரு டாபர் மாமாவாக வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி அயிட்டம் டேன்ஸ் ஆடி துட்டு அனுப்பிக் கொண்டிருக்கிறாள். நாங்கள் வாழும் இந்த எச்சில் வாழ்க்கைக்கு என்றாவது ஒரு தினம் பழி தீர்க்க வேண்டாம்? அதற்கு தான் நான் என் மகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். நம்பர் ஒன் மிருதுளாவை விட எல்லாம் உயரத்துக்கு அவளை கொண்டு போவேன். இன்று இப்போது நான் பார்த்துக் கொண்டு இருப்பதெல்லாம் தான் கனவு. நாளை எழ வேண்டும். வயிற்றுக்காக என்றில்லாமல் எல்லாவற்றிற்காகவும் எல்லா நேரத்திலும் கூட்டிக் கொடுக்கிற இந்த மகா ஜனங்களை அசடுகளாக நிறுத்த வேண்டும், என் மகளைக் காட்டி.

எவ்வளவு வேலையிருக்கிறது? மிருதுளாவை தப்பாய் பேசின ராம ஜெயத்தை நான் அந்தப் போதையிலும் அடித்து மூஞ்சியை உடைக்கவில்லை. திரும்பி வந்து தூங்கிக் கொண்டிருந்த மினியின் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய ரசிகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று இவளிடம் கேட்பார்கள். நான் என்ன சொல்லறது, ஓலகத்துல நமக்கு அப்பா அம்மா தான் முக்கியம். அவங்கள நல்லா வெச்சு பாத்துக்கங்க என்று கண்டிப்பாக இவள் பதில் சொல்வாள்.

வேற என்ன. கெடக்கறானுங்க. தூங்கு.



ஹீரோயின்
ஒரு சிறுகதை.
     

 


Wednesday, June 14, 2017



அரிது
வீசும் காற்றின் பாத சுவடுகளை
தவற விட ஏலாத கட்டுமரக்காரனின்
ஒரு நாள் வானம் ஒரு பெரிய ஓர்மையாயிற்று
எரிந்தும் அணைந்தும் அரிது ,
அப்படி நின்று விட்ட விண்மீன்.

கண்ணீர் உப்பு
கடல் நீர் உப்பு
தடதடக்கும் காற்றால்
தடுக்கி விழுவதெல்லாம் உப்பு
கரையில் கனவில் கட்டிலில் உப்பு
விழுங்கி வெளிவிடும்
பிராணனில்
தேன்.

சொல்ல விரும்புவது
ஏலேலோ ஐலசா.









  

Friday, June 9, 2017




யாரோ ஒருவனை வெட்டிப் போட்டிருக்கிறார்கள்.
பிணத்தை பார்ப்பதற்கு முன்னே ஏதாவது ஒரு நாய்
நிச்சிந்தையோடு நடந்து போயிற்றா தெரியவில்லை
முன் விரோதமா முன் விதிப் பயனா தெரியவில்லை
கத்தி வீசப்படுவதற்கு முன்னால் சிந்தித்துக் கொண்டு
இருந்திருக்கலாம், சீழ்க்கையடித்தவாறு இருந்திருக்கலாம்,
தெரியவில்லை.
வீசியவனே சாவிலிருந்து தப்பி போயிருக்கலாம்
வீசிய கத்தியே வீழ்ந்தவுனடையதாய் இருக்கலாம்
எதையும் எப்படி சொல்லி விட முடியும்
நட்ட கண்களுடன் இவன் வருகையை காத்து ஒரு
கன்னி இள மானோ கண்ணவிந்த ஒரு தாயோ மட்டும்
இவனுக்கு இல்லை, உறுதி.

அட விடுறா அட விடுறா என்பது போல
பாருங்கள், இந்த முகத்தில் எத்தனை ஏளனம் ?  

Wednesday, May 17, 2017




தானே தன்னைக் கொத்திப் போட்டு
குவித்தாலும் சரியும்
நிற்காத நெடுஞ்சுவரில்
எழுதாத வரிகளிலெல்லாம்
அவர்கள்

காணும் பச்சையில் பச்சையில்லாமல்
தீண்டும் ஒலியில் தொடுவிரலில்லாமல்
சன்னலை வெறிக்கும் பேதலிப்பில்
அவர்கள்

அலையாய் எழுந்து விழுந்து
அழிந்து போகிற கரையோரத்தில்
கவனித்தால் அறிவீர்கள்,
கடலுக்கு இருக்கிறது ஒரு
ஒற்றைப் பெருமூச்சு.

அவர்கள்.

Monday, May 15, 2017



கோழிக் கழுத்தை அறுத்தது பார்த்ததும்
மாமிசம் விட்டேன் என்றெல்லாம் சொல்லவே
வேண்டும்
நெருப்பில் அது பொரியும் போது
நீதி தேவன் மயங்குகிறான்
கொஞ்சம் ஷுகர்
கொஞ்சம் பிரஷர்
தேவைப்படுகிறது கொஞ்சமெல்லாம்
சொகுசு
நீதி தேவனுக்கு சொறிச்சலெடுத்தால்
கோழியுடன் செல்பி
மற்றபடி சிக்கன்
பிராண்டிக்கு சைட் டிஷ்.
கோழி என்று நான் கோழியை
சொல்லவில்லை
நீதி தேவன் என்று
நீதி தேவனை சொல்லவில்லை.

Thursday, March 9, 2017





தொட்டு விட ஆகாத
தூரத்திலங்கே
பாக்கு மரங்களின் மீது
புகையாய் தெரியும் மழை
நெல்வயலில் நிரம்ப
தோணியிலேகி கடுகி வந்த
மோட்டார் புரையில்
ஜில்லிப்பு

நீரிலிட்ட பழஞ்சோறு
சாளை மீன் குழம்பு

கைமாறி கைமாறி
ஓரிரு தம்மு தான் என்றாலும்
பச்சை காஜாவின் தங்கம் மினுங்க
நுரையீரலில் மேகம் பிதுங்கும் போது
அவை இரண்டும் வரப்பு சேற்றில் பிணைந்து
வழுக்கி இறங்கி
மேலும் இறங்கி
இறங்கி
எனது பாயில் உறங்குகின்றன
அன்றாடம்

சர்ப்ப தோஷம் உள்ள
காலம் சூழும் போது
ஒரு காள் பண்ணு.    




Saturday, February 18, 2017




நுழைந்தும் அமர்ந்தும்
திணித்தும் தணிந்தும்
முறைக்குள் பிதுங்கும்
ஒன்றை
பாறை மீது மோதி பிளந்து
குளிரில் விறைக்க வைத்தேன்


ஒரு தேநீர் சாப்பிடும் நேரம்
வனத்தின் துல்லியத்தில் திடுக்கிட்டு பறக்கும்
ஒற்றைப் பறவை கிழித்த காற்றை கேட்டிருத்தல்
கண்ணியமான தோழி அறியாமல்
முலை முனையில் ஒரு சிந்தனை
மற்றும் பல தாள்களில் எனது பெயரை எழுதி
அதன் வசீகரத்தை நிலை நிறுத்த
கொழா சண்டை


அவ்வப்போது
உறக்கத்தில் நடந்து
மந்திரம் பிதற்றி
ஆணியை பிடுங்கி
அந்த ஓநாயை தழுவிக் கொள்ளும் போது
கழுத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் குருதி
கிணுங்கென்று விழும் மின்னாமினுங்கி
தங்க நாணயம்.


அறிவாயா என் கிளிக்குஞ்சே
அது நான் செல்வழிக்காத சொல்.

Wednesday, February 15, 2017








தொட்டால் பூ மலரும்.
ஒரு சிறுகதை.







தொடட்டுமா என்று கேட்டேன்.

தொடு என்று சொல்லலாம். தொடாதே என்று சொல்லலாம். அவள் அங்கிருந்து நகர்ந்து சென்று யாராவது நான் சொன்னதை கவனித்திருப்பார்களா என்று பார்த்தாள். சந்தேகம் தீராமல் பார்த்தவாறே இருந்து கிளர்ச்சியுடன் என்னை நோக்கி திரும்புவதற்குள் ஆட்கள் வந்து விட்டார்கள். எனக்குள் டிரம்ஸ் முழங்கி கொண்டிருந்தது. அதே இதய துடிப்பு முகத்தில் முழங்குவதை யாரும் கவனித்து விடக் கூடாது என்பதற்காக அவள் பாத்ரூம் சைடு போவதை பார்த்திருந்தேன்.

இன்று முடியாது.

வந்து, என் எதிரில் உட்கார்ந்திருந்தவன் " எனக்கு ஜே ஜே புரியல " என்றான்.

ஒரு பிடி மூச்சுக் காற்றைக் கைப்பற்றினால் தான் பேசவே முடியும். அப்புறம் அதில் தங்கி சகஜம் பண்ணிக் கொண்டால் இலக்கியம் பேசலாம். அந்த தர்ம சங்கடம் தொடங்குவதற்குள் தம்பி வந்தான். அப்பாவிற்கு உடல் நலமில்லை என்பது செய்தி. நான் யாருக்கும் எதையும் சொல்லவில்லை. அவனையும் அழைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தேன்.

பிரச்சினை வயிற்று போக்கு. நிறைய தடவை போயிருக்கிறது. டிகாஷன் டீ குடித்து வைத்திருக்கிறாராம். கேட்ட போதெல்லாம் போட்டு கொடுத்திருக்கிறேன் என்று அம்மா திருப்தியாய் சொன்னாள். படுத்திருந்தவரை வலுக்கட்டாயமாய் எழுப்பி ஒரு ஆட்டோ வைத்து அழைத்துப் போனேன். அட்மிட் பண்ண சொன்னார்கள். மனசு பயம் கொள்ள துவங்கியது.

கேள்விப்பட்டு சிலர் வருவார்கள். யாரிடமெல்லாம் காசு கேட்க முடியும்?

இரண்டு கரத்திலும் க்ளுக்கோஸ் டியூப் பொருத்தப்பட்டது. பொதுவாய் எந்த வியாதியும் வராமல், அப்படி வந்தால் எந்த ஹாஸ்ப்பிட்டலுக்கும் போகாமல் டிமிக்கி கொடுத்து வந்தவர். படுக்கை மற்றும் சூழ்ந்து பார்க்கிற மருத்துவர்கள், தாதிகள், இன்ன பிற செட்டப்ஸ் அவரை மிரள வைக்கும். அவர் மூர்க்கமாய் பல விஷயங்களுக்கும் ஒத்துழைக்கவில்லை. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அதட்டினேன்.

அவர் என்னை பார்த்தார்.

அது ஒரு வெளிறிய பார்வை.

எனக்கு அவர் மனசு தெரியும். அது மிகவும் இலேசானது. பாசத்தின் கனம் தாங்க முடியாமல் இருக்க, அவரை அப்பட்டமான பச்சை வாழ்க்கை துரத்திக் கொண்டிருந்தது. எங்கே பிள்ளைகளை கவனிக்க யாரும் இல்லாமல் போய் விடுவார்களோ என்று பயந்தவாறே இருக்கிறவர். சும்மா படுய்யா என்று கத்தி அவர் பார்வைக்கு நான் பின்னடைந்த கணத்தில் ஒரு நாள் நடுஇரவில் தெரு முனையில் நின்று கொண்டிருந்த அவரின் உருவம் மனதில் வந்து போயிற்று. மவுண்ட் ரோட்டில் உள்ள மிட்லண்டில் அதர் சைட் ஆப் மிட் நைட் பார்த்து முடித்து சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வந்து முரளி கிருஷ்ணா அருகே மலாய் பால் குடித்து, காஜா புகைத்து திரும்பும் போது வீட்டின் தெரு முனையில் இவர். கடந்தேன். பேசவில்லை. தூங்கி கொண்டு இருந்தவர்களை தாண்டி சென்று தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டு சாப்பிட்டேன். விளக்கை அணைத்துக் கொண்டு படுத்தேன். பிறகு மெல்ல எட்டிப் பார்த்தேன். மார்பைத் தடவிக் கொண்டு தளர்வாய் சாய்ந்தார். அது பற்றி யோசித்து அடுத்த கணம் தாவினேன். Noelle ஒரு ஆங்கரால் பாத் டப்பில் உட்கார்ந்து கொண்டு தனது கருவை உருவியெடுத்து ரத்தக் களரி செய்யும் காட்சிக்கு திகைத்திருந்து, அதுவும் தாங்காமல் காதலில் ஈடுபடும்போது அவள் முகம் அவிழ்த்த பாவனைகளை தொகுத்தேன். அப்புறம் நேரம் போனதும் தூக்கம் வந்து விட்டதும் எல்லாம் வழக்கமான நடைமுறை தான். காலையில் அவரது முகம் கஷ்டப்படுத்தியது. அவரை சரி செய்ய முடிகிற ஒரு சமாதானம் மட்டும் எப்படி நழுவுகிறது என்பதே பிடிபடுவதில்லை. அவரே வாரம் ஒரு முறை படம் பார்க்க பணம் தருவதாகவும் இனிமேல் இரவுக்காட்சிகள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி கேட்கும் போதே இதெல்லாம் நடக்கப் போவதில்லை என்று உணர்ந்து உலர்ந்தவாறே தனது வீழ்ச்சியை அவர் வரவேற்றிருக்க வேண்டும்.

தூக்கம் நிற்கவில்லை. அவ்வப்போது திடுக்கிட்ட விழிகள் திறக்கும் போதெல்லாம் பிள்ளைகளை அதனுள்ளே அள்ளிக் கொள்ள விழைந்த பேராசை தெரிந்தது.

அருகிலேயே இருந்தேன். இமைகள் அயரவோ உறக்கத்திற்கு விருப்பப்படவோ இல்லை. காலையில் நிலைமை இன்னும் மோசம். டாக்டர்கள் குழுமி கிசுகிசுத்தார்கள். கடன் பெற்ற காசுடன் மருந்துகள் வாங்க ஓடினேன். ஊசிகளை ஏற்றினார்கள். மருந்துகளை ஊற்றினார்கள். திணறிக் கொண்டிருந்த போது கவனித்த தம்பி என்னை வீட்டுக்கு போக சொன்னான். விழித்தேன். குளித்து பிரெஷ்ஷாகி வர வேண்டுமாம். அதற்கென்ன. அப்பனுக்கு எதிராய் எப்பவும் நான் புரிந்த நற்செயல்களை தொகுத்தவாறு நடந்தேன். வீட்டுக்குள் நுழைந்த மறுநிமிடம் ஆளற்ற அந்த வீட்டில் படுக்கையில் விழவே தோன்றியது.

முதலில் என்னை தொடுவதற்கு பயமா என்று கேட்டவள் அவள் தான். பிள்ளைகளை தள்ளிப் போய் விளையாடும்படி சொல்லிவிட்டு அவள் இதைக் கேட்டாள்.

அப்போது அந்த முகத்தின் மீது சாயந்திரத்தின் வெயில் கடந்து போயிற்று. ஒளி வெள்ளத்தில் ஈரம் படர்ந்த உதடுகள் ஒரு முறை மடிந்து நிமிர்ந்தன.

நான் ஒருக்களித்தேன். தொட்டால் பூ மலருகிற வேலையை துவங்கினேன்.

குளித்து துதித்து எல்லாவற்றையும் சரி பண்ணிவிடலாம் என்று அங்கே போகும் போது அப்பா செத்துப் போயிருந்தார்.

மண்ணள்ளிப் போட்டோம்.

ஜே ஜே புரியவில்லை என்றவன், ஜே ஜே என்னை ஒரு எழுத்தாளனாக்க உந்துகிறது என்றான். இப்போ,ஜே ஜே ஒரு நான்சென்ஸ் காலத்துக்கு வந்து விட்டேன்.

நிறைய பேரை தொட்டேன். அது வேண்டியிருந்தது. ஒரு காரியக்காரனுக்கு தெரியும், அதில் கபடங்கள் எதுவும் வேண்டியிருப்பதில்லை.

இன்று என்னைத் தழுவி முத்தமிடும் எனது மகனின் ஸ்பரிசத்தில் ஒரு பெத்த மனசின் துடிதுடிப்பை அறிந்தாலும் மனிதனின் காரியங்கள் எதைப் பற்றியும் சொல்ல முடியாது என்பதை அவரிடம், என் அப்பாவிடம் சொல்ல விரும்பினேன். உயிர் பிரிந்த மறுநிமிடம் அவர் வீட்டுக்கு வந்து நான் செய்து கொண்டிருந்த தொட்டால் பூ மலரும் காரியத்தை பார்த்திருப்பார் என்கிற திடுக்கிடல் இன்றுவரை எனக்குள் ஓடுகிறது.
அதில் என்னை வதைக்கக் கூடிய ஒரு கஷ்டம் என்னவென்றால் அவர் அதை புரிந்து கொண்டிருக்கவே மாட்டார் என்பதை இன்று நான் நேரிடும் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.


*********

Saturday, February 11, 2017










வாகனங்கள் வந்திருக்காத
குடசாத்ரியில் பண்டொரு நாள்
மலைப் பிரசங்கம் செய்தேன்

கேட்டிருந்தார்கள்
நாலே பேராயிருந்தாலும்
நண்பர்களாயிருந்ததாலும்

ஆர்டர் செய்த வைனில் கொஞ்சமும்
சாலமன் மீனை பேர்பகுதியும் வைத்து விட்டு
எழுந்து போகிறவனில் வராத பசி தான்
பொன்னகரத்து அம்மாளுவை இருட்டுக்கு
அனுப்புகிறது என்றெல்லாம் உரை வீச்சு

இப்போதும் மலைகளில் ஏறும்போது
மூச்சிரைப்பிடையே கவனிக்கிறேன்

எவனாவது பேசிக் கொண்டிருக்கிறானா
பைத்தியம் மாதிரி.