சகல சீரழிவுகளுடன் கூடிய ஒரு பிரம்மச்சாரியின் அறை. ஒட்டப்பட்டிருந்த காகித பெண்களின் முளைகளும், தொடைகளும் முண்டுகின்ற பின்னணியில் இளைஞன் அவசர அவசரமாய் பணத்தை எண்ணி பரபரப்புடன் சட்டை மாற்றுகிறான்.
மாயமாய் தோன்றுகிறார் ஒரு ஆசாமி.
இளைஞன் ரொம்ப தற்செயலாய் கவனிக்க.
"நான் கடவுள் வந்திருக்கிறேன் !" என்றார்.
இவன் சரியாய் கவனிக்காமல் "ஆங்? " என்று கேட்கிறான்.
"கடவுள் வந்திருக்கிறேன் !".
இது என்ன குழப்பம் என்பது போல இளைஞன் ஒரு கணம் யோசித்து நிற்கிறான். குழப்பமாய் "கந்தசாமி பிள்ளைய பாத்துட்டு போன கடவுளா ?" என்கிறான்.
அவர் தலை குனிகிறார்.
"எதுக்கு இப்ப இந்த பிரத்தட்ஷ்யம் ? அவசரமா வெளியே கெளம்பிட்ருக்கேன் !"
"உன் கூட ஒரு நாள் ".
இளைஞன் விழுந்து விழுந்து சிரித்து விட்டு சட்டென்று அடங்கி " ஓகே.. ப்ராபளம் என்னன்னா நான் ஒரு பிராஸ்டிட்யுட் வீட்டுக்கு கெளம்பிட்ருக்கேன்.. சரிப்பட்டு வருமா உனக்கு? " என்கிறான்.
கடவுள் ஒரு திருட்டு குழந்தையை போல அசட்டு சிரிப்பு சிரித்து வைக்கிறார்.
கண்டிப்பு குரலில் இவன் " யெஸ் ஆர் நோ " என்கிறான்.
"யெஸ்".
"இப்படியே தான மெயின்டேயின் பண்ணப் போற?.
"ஆமா".
"கீரிடம், ஆயுதங்க, சீரியல் பல்புங்கள எல்லாம் வெளிய கட்டிராத ஏடாகூடமாயிரும்".
மாலை நேர பரபரப்பு. குளிர்பான வண்டியில் அடிபட்டு விடாமல் கடவுளைக் காப்பாற்றுகிறான் இளைஞன். ஒரு பிஸ்ஸா கடையை கடக்கும் போது அவரது வேடிக்கையால் ஆட்கள் இடித்து விட்டுச் செல்கிறார்கள். பிதுங்குகிற அவரை நிலைப்படுத்தி சற்று அதட்டலுடன் " கடவுள்னா ஒரு லாவகம் கெடையாதா?. மூளவளர்ச்சி இல்லாத பய்யன மாதிரி அநியாயத்துக்கு ஸ்லோமோஷன் !" என்கிறான்.
வருத்தத்துடன் கடவுள் " ஸாரி" என்கிறார்.
" வா. வா !".
நடக்கிறார்கள்.
காரியாத்தமாய் நடக்கிற அவனை ஊடுருவியவாறே தயக்கக் குரலில் "கல்யாணம் பண்ணிக்கலாமே ?" என்கிறார்.
"சாதிக்கணும். சம்பாதிக்கணும். செட்டிலாகனும்... நெறைய இருக்கு.. !' என்று பெருமூச்சு விடுகிறவன் சட்டென்று ஒரு ரகசியக் குரலில் "அதுமட்டுமில்ல. நான் இன்னும் வயசுக்கே வரலன்னு நெனைகிறாங்க எங்க வீட்ல!. என்கிறான்.
"ஓஹோ ?"
நடக்கிறார்கள்.
இன்னமும் அதிகமான தயக்கத்துடன் " புலனடக்கம் கொள்ளலாமே ?. என்கிறார்.
அவன் நடப்பதை நிறுத்தி விறைப்பாய் அவரை நோக்கி முறைக்கிறான். பிறகு வேறு ஒரு பக்கம் பார்கிறான்.
அவன் பார்க்கிற திசையை அவரும் பார்கிறார்.
சுவர்கள் முழுக்க பெண்கள். பிதுங்கி வழிகிற உடற்பகுதிகள்.
நாக்கைக் கடித்துக் கொண்டு மிகவும் வருத்தத்துடன் மறுபடியும் "ஸாரி" என்று சொல்கிறார்.
அதை அங்கிகரித்தவாறு "விவரந் தெரியாத பொண்ணுங்க கிட்ட மூவ் பண்ணா லவ் பன்னலாம்ங்கிறாங்க. பாப்கார்ன் கொறிச்சு சினிமா பார்த்து சரி விவரந் தெரிஞ்சவங்க கிட்ட மூவ் பண்ணா அப்படி இப்படின்னு டெவலப் பண்ணி கடைசில 'ஆ. எங்க கற்பு என்ன ஆவறதுன்னு ' நியாயம் கேக்றாங்க !".
கடவுள் அவன் கூறுவதற்கு தலையசைத்தது ஒப்பு கொள்கிறார். மானசீகமான குரலில் "செரமம் தான் !" என்கிறார்.
ஒரு இருண்மை பகுதி.
நிழல் முகங்களின் நடமாட்டம். வழக்கமான மர்ம சூழல்.
இளைஞன் ஒரு அலங்காரியுடன் தனி அறைக்குள் செல்கிறான். இவரிடம் கையசைத்து விடை பெற்று விட்டு.
விழித்தவாறு நின்றிருக்கிறார் கடவுள்.
டாபர் மாமி வெற்றிலைச் சிரிப்புடன் தந்திரக் குரலோடு பெரியவரே, "நீங்க செலக்ட் பன்றீங்களா?. என்றாள்.
அவர் பதில் சொல்ல தெரியாமல் பாமரத்தனமாய் குருகுகிறார்.
காட்சியில் இப்போது முப்பது வயதில் இரண்டு மூன்று பெண்கள் சந்தேகமின்றி அவர்கள் தம் முழு திறமையோடு சங்கேத அழைப்பை விரித்து வைக்கிறார்கள். முலைகளும், தொப்புளும், எச்சிலால் நனைக்கப்பட்ட உதடுகளின் கோணல்களும் கடவுளை நெளிய வைக்கிறது.
அப்பெண்கள் நகர ஒரு தாவணிப்பெண். அவளும் நகர பாவாடைச் சட்டையில் ஒரு சிறுமி. சிறுமி நகர எட்டு வயதில் ஒரு சிறுவன். சிறுவன் நகர ஒரு தூய வெள்ளைக் கன்று குட்டி.
ஏதோ ஒரு தெய்வத்துக்கான வழிப்பாட்டு ஊர்வலம் ஒன்று செல்கிறது.
தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஒரு ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார் கடவுள். ஆக்ரோஷமான வழிபாடாயிருக்கிறது அது. காறித் துப்பியவாறே வந்து சேருகிறான் நம் இளைஞன்.
நடக்க ஆரம்பிக்கிறார்கள்.
கடவுளின் அமைதியைக் கண்டு இளைஞன் "என்ன ஆச்சு ?" என்கிறான்.
கடவுள் ஒன்றும் கூறவில்லை.
அவருக்கு எதிர்ப்படுகிறாள் ஒரு பெண். அவள் பெண்ணில்லை. அழுக்கு மூட்டை. குருபீ. வெறும் எலும்புக் கூடாயிருக்கிறாள். அவளோடு பொருந்தாத சீலைகள் காற்றில் பறக்க அவளோடு இணைந்து வருகிறது ஒரு புழுத்த நாய். பின்னாலே ஓடி வரும் இளைஞன் ஒருவன் அவளை இழுத்துக் கொண்டு இடிந்து நிற்கிற கட்டிடமொன்றில் நுழைகிறான். இரண்டு கால்களையும் பிளந்தவாறு அவள் நடக்கிற நடை உறைக்கிறது.
கடவுள் விதிர்த்து நிற்கிறார்.
இவன் சிரிக்கிறான். "கூட்டத்துல தவறி இங்க வந்துட்டா. அப்புறம் என்ன ? சீரழிவுதான். சீக்கு பிடிச்சிருச்சு. அஞ்சுக்கும், பத்துக்கும் அலையறா!. என்று கூறுகிறான். "சாப்பிடவோ தூங்கவோ அவளால முடியாது. பாதி பைத்தியம் !. கஸ்டமருங்க குடுக்கிற பணத்துல நாய்க்கு பன்ன வாங்கி போட்டுட்டு மிச்சம் பிடிச்சுக்குவா. எதுக்கு தெரியுமா? ". அவனது விபரீத சிரிப்பை பொருட்படுத்தாமல் கடவுள் அவர்கள் ஒதுங்கிய பகுதிக்குள் ஓடுகிறார்.
இவன் வேறு வழியின்றி தொடர்ந்து ஓடுகிறான்.
அவள் மீது படுத்திருந்தவன் பயத்துடன் எழுந்து விலகிச் செல்ல, மல்லாந்திருந்த கால்களோடு இவரைப் பார்க்கிறாள். அவள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிகிறது. கண்களுக்கு தெரிகிற அம்மனத்திலிருந்து நாற்றம் எழ, கடவுள் மூக்கை பொத்திகொள்கிறார்.
அவள் வாஞ்சையோடு அவரை நோக்கி சிரித்து ரூபாய் நோட்டை எறிகிறாள்.
ஆபாசமான ஒரு அபிநயத்துடன் "வா ! வந்து செய்" என்கிறாள்.
"கடவுளே" என்று வீரிடுகிறார் கடவுள்.
"ஈசாவஸ்யம் இதம் சர்வம் !"
(A short film's script )