Tuesday, July 9, 2019






நில்

ஒரு கணம் ஒரு ஒளி
ஒரு தருணம்

நீ நெட்டி முறித்தால் திடுக்கிடுகிற
என்னில் இருந்து நீ எப்படி படியிறங்க ஆகும்

அகஸ்மாத்தாய் உன் கண்ணில் இடித்து விடும் புல் பூண்டில்
நமக்கான பூக்கள் பூக்கவில்லை ?

எப்படியோ
நீ தாவி குதிப்பதென்றால்
உன்னை தாண்டியிருக்க வேண்டும்.
பாலில் புளிப்பேறும்
காலமற்ற கானகத்தின்
நிலவொளியில்
மண்ணில் விழுந்து புரள்கிறது
விண்ணை நோக்கி பாடுகிறது
ஒளிவில் இருக்கும்
ஓநாய்.

ஷட் அப்
வை லைக் திஸ் மேன்

சூ சூ

சன்னதமில்லை
சாகசமில்லை
சரசமோ, சாமர்த்தியமோ
இல்லை
குத்துவதோ, குத்துப்படுவதோ
இல்லவே இல்லை.

பொறுப்பாய் பொறுக்கி தின்னும் வாழ்க்கை.