என்னைப் பார்த்த கண்களில்
நான் கண்டறிகிற ஒரு நூலேணி
உண்டு என்றான்
அது முதலில் நம்மைத் தீண்டும் கரம்
அது அப்புறம் இரண்டு முலைகளிலும் விறைத்த காம்பு
என்னில் இருந்து அறுந்து
இறங்குந்தோறும்
உலை கொதிக்கிற இதயத்தின்
அனல் மோதி வெந்து கொண்டிருக்கிற
தூய இறைச்சியின் மணம்
அவன் நூலேணியைப் பற்றிக் கொண்டு ஏறி திரும்பப் போவதில்லை
பரவாயில்லை,
நான் இங்கே சார்த்தரின் இருத்தலியல் தான்
பேசிக் கொண்டிருந்தேன்
என்றான்