இன்று ஒரு புகைப்படத்தில்
ஒரு பெண்ணின் கண்களைப்
பார்த்தேன்.
அது யாருடையவை என்பது
அத்தனை முக்கியமில்லை
எத்தனையோ ஒளியாண்டுகளில் பறந்து
யாரோ ஒருவரின் நினைப்பைத் தொட்டேன்
அல்லது கனவை
அல்லது சரியாக புரிந்து கொள்ள முடிகிறதா பார்
ஒருவரின் துல்லிய கண்ணீர்
தருணத்தை
அல்லது ஏதோ ஒரு கருணாமயனின் கை விரலை
நாளைக்கு காலை வயித்துக்கு எங்கே
கயித்திலாடுவது என்கிற முகவரியை நான்
மினுக்கிக் கொண்டிருப்பது போல
சீட்டியடித்தவாறு
அப்பெண் தன் பிள்ளைக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கலாம்
எதிலும் ரசமில்லை
எதுவும் அற்புதமில்லை
விண்வெளியிலிருந்து தொங்குகிற ஒரு பொன்னூஞ்சல் மட்டும் அசைந்தவாறிருக்கிறது.
ஒரு பெண்ணின் கண்களைப்
பார்த்தேன்.
அது யாருடையவை என்பது
அத்தனை முக்கியமில்லை
எத்தனையோ ஒளியாண்டுகளில் பறந்து
யாரோ ஒருவரின் நினைப்பைத் தொட்டேன்
அல்லது கனவை
அல்லது சரியாக புரிந்து கொள்ள முடிகிறதா பார்
ஒருவரின் துல்லிய கண்ணீர்
தருணத்தை
அல்லது ஏதோ ஒரு கருணாமயனின் கை விரலை
நாளைக்கு காலை வயித்துக்கு எங்கே
கயித்திலாடுவது என்கிற முகவரியை நான்
மினுக்கிக் கொண்டிருப்பது போல
சீட்டியடித்தவாறு
அப்பெண் தன் பிள்ளைக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கலாம்
எதிலும் ரசமில்லை
எதுவும் அற்புதமில்லை
விண்வெளியிலிருந்து தொங்குகிற ஒரு பொன்னூஞ்சல் மட்டும் அசைந்தவாறிருக்கிறது.
No comments:
Post a Comment