அவர் தனது பெயர் பூமாலை
என்றார்.
பீடியைக் கமறி சளியைத் துப்பினார்
ஒரு பிச்சைக்காரன் வேஷம்
கொடுத்து விடலாம்.
ஆனால் தொப்பி, பட்டைகள், இடுப்பு பெல்ட்,
ட்ஜாங்கோ பூட்ஸ் மற்றும் எல்லாவற்றிலும்
ஜிகினா என்கிற கூண்டுக்குள் இறக்கி நிறுத்தபட்டிருந்தார்
அமெரிக்கன் கலர்
அவரைப் பார்த்தால் சிரிக்கலாம்
போலிருந்தது
அவரது வாசிப்பைக் கேட்கையில்
அழலாம் போலவும் வந்தது.
இதற்கு நான் என்ன செய்ய முடியும்,
நீ, அவர், அவர்கள் என்ன செய்து விட முடியும்
ஓகே, இந்த பங்சனுக்கு எனது மகனுக்கு
பாண்ட் ட்ரெஸ் வாங்கிக் கொடுத்தேன்.
அது இல்லை, அதைப் போல
அமெரிக்கன் கலர்.இப்போ இவனது
வாழ்வையாவது குரங்கைத் தள்ளி
நிறுத்தி விட்டு எடுத்துக் கொள்வானா
கடவுள்?
No comments:
Post a Comment