எனக்கு தெரிந்த இருவர்
ஒரு ஆண் ஒரு பெண்
கண்களுடன் கண்கள் சந்திக்காமல்
தப்பிப்பார்கள்
பசிக்கும்போது வெறுத்து
பசிக்காதபோது புசித்து
வருடங்களாக மனசை விரட்டினார்கள்
ஒருநாள் மழை போல பொழிந்த தனிமையில்
இடி இடித்து மின்னல் வெட்டியபோது
ஒருவரை மற்றவர் கொன்று கொள்ளத் துணிகிற
ரத்ததாகம் பார்த்தேன்
அவர்கள் இருவரும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள்
என்பது புலனாயிற்று
ஒருவர் சாவுக்கு மற்றவர் வந்து விடக்கூடாது
என்கிற பிரங்ஞை தொடர்கிறது
அவர்களை சுற்றியுள்ளோர் அவர்களின் சாவை
துதித்துக் கொண்டிருக்கிறார்கள்
No comments:
Post a Comment