Monday, April 27, 2020





மலை மீதிருந்து இறங்கும்போது
பக்கவாட்டில் பள்ளத்தாக்கில்
ஒரு வெள்ளி மினுங்கிய அருவி மறைந்து
நினைக்கும் போதெல்லாம் நனையும் குளிர்
அந்த சந்திப்பு
நீயா போனாய் என்கிறேன்
யாரோ தனது பாலையில் கானலைக் காய்ச்சும்போது
அவர் தரிசனம் ஒளிர 
தணல் அடுப்புக்கு முன் உள்ளங்கரங்களை
தேய்த்துக் கொள்கிற யாரோ இருப்பது தெரியாது,
என்ன ஒரு கண்ணாமூச்சி ?

நீயா போவாய்
என்கிறேன். 
      

No comments:

Post a Comment