Friday, April 10, 2020

அவளும் அவனும்
பன்நெடுங்காலமாக
பக்கத்தில் பக்கத்தில் தான்
இருந்தார்கள்
இருப்பினும்
எதிர்பாராத திருப்பத்தில்
ஒரு தினம் சந்தித்துக் கொண்டார்கள்
அந்த தெரு அங்கே அப்படி வளைந்திருக்கும்
என்று யார் கண்டது
அதற்கு அப்பால்
நீ விரும்புகிறாயா என்று அவன் கேட்கவில்லை
நான் விரும்புகிறேன் என்று அவள் சொல்லவில்லை
சொல்லப்போனால் சந்திப்புகள் கூட இல்லை
அவளும் அவனும் தன்னைத்தான் விரும்ப ஆரம்பித்தார்கள்
நிலைக்கண்ணாடியில் வெறித்தார்கள்
எதிராளி வெறித்தது அனைத்தையும்
கடவுள் அதற்கு கணைத்தது பார்த்து தான்
நான் இந்தக் கவிதையை துவங்கினேன்.
ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றப்போக
அழிந்து போன நூறு எறும்புகளுக்கு
ஊற்றிய மனிதனை தெரியாத ஒரு தூரம்
இருக்கிறது, அங்கிருந்து அவன்
கணைத்திருக்கலாம்
பசி முடிந்து பளீரிட்ட கண்ணீரை
அவர்கள் கண்டறிந்தார்கள்
நிலாவுக்கு அழுததை பரிமாறும்போது
உப்பின் ருசியை எழுதி வைத்தார்கள்
கனவின் தனங்கள் கனக்கின்றனவென்றால்
நம்பாமல் என்ன, பாலூறும் காவியங்களில்
தலைபுதைத்து அவன் தன்னை மறுக்க
மேவினான்
உலகு தாம்பாளத்தில் அடுக்கி வைத்த
நெருப்பு தந்தது.
புன்னகைகளின் கருஞ்சுழிக்கு தங்கள் சதைகளை
பிய்த்துப் போட்டார்கள்
உட்காருமிடம் சௌகர்யம்
இல்லை கடவுளுக்கு
சபித்தவாறு இருப்பதெல்லாம்
காதுக்குள் கூசியது
ஒரு சொட்டு விழுந்து
ஓரிரு காற்றுக்கு பின்னால்
ஆத்திரம் கொண்ட சிசுவாட்டம்
சீறி விழுந்த மழை பெருகி
ஊர் உலகம் தனது சம்பாத்தியங்களை
மூட்டை கட்டும் ஒரு நள்ளிரவில்
குட்டிச்சுவருக்கு ஒளிந்து நின்று
குளிரில் அவள் தனது வாய் கொடுத்தாள்
அருந்தி முடித்துப் போனவன்
ஆற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தான்
அன்று இரவெல்லாம்
அது உலகை நொறுக்க மோதியிருந்தது
அவன் அதில் குதித்து இருக்கக் கூடாதா
என்கிற நினைப்புக்கு வெட்கப்பட முடியவில்லை
கடவுளால்
ஏனென்றால் அவன் இன்னமும் கேட்பான்
அவள் தன்னை தொட்டு அவனை அறியும்போது
காதுகளில் குடைய அவர்களின் மந்திரம் வரும்
பேஜாரா இருக்கே
என்றார் அவர்
கொலை, தற்கொலை,
விபத்து, வியாதி?
இருவரையுமா - ஒருவரை
விட்டு மற்றொருவர்?
கோழைத்தனமாக சதி செய்வது போல
ஒரு இழிவு
ஒரு மண்டைக்குள் உள்ள திரிக்கு தீ கொடுத்து
திரவமாக்கி சாலையில் அலைய விடுவது?
கடவுள் time பார்த்தார்
அதற்குள் அவள் தனக்குள் ஒடுங்கி இளைத்தது போல
அவன் கூட்டத்தில் பிதுங்கி இளைத்தான்
முன்பொரு நாளில் இருந்த விதூஷகனை
அவள் வேண்டி விரும்பி கேட்டதில் காட்ட முயன்ற போது
மேடையில் ஆடைகள் அவிழ்ந்தன
குறுகி நின்றவனை கூட்டிப் போய் சிரம் வருடி
முலை கொடுத்து
அண்ணாந்து பார்த்து நாயே என்றாள்
அவர்களுக்கு நடுவே ஆயிரம் பேர் வேலை பார்க்க
அவர் நாய் நாய் நாய் நாய் என்று
நடுங்கிக் கொண்டிருந்தார்.
என்ன செய்ய வேண்டும் இவர்களை என்று
உறுமியதும் கூடவே கேட்டது
கொலை, தற்கொலை,
விபத்து, வியாதி?
இருவரையுமா - ஒருவரை
விட்டு மற்றொருவர்?
கோழைத்தனமாக சதி செய்வது போல
ஒரு இழிவு
ஒரு மண்டைக்குள் உள்ள திரிக்கு தீ கொடுத்து
திரவமாக்கி சாலையில் அலைய விடுவது?
கடவுள் time பார்த்தார்
அதற்குள் அவள் தனக்குள் ஒடுங்கி இளைத்தது போல
அவன் கூட்டத்தில் பிதுங்கி இளைத்தான்
முன்பொரு நாளில் இருந்த விதூஷகனை
அவள் வேண்டி விரும்பி கேட்டதில் காட்ட முயன்ற போது
மேடையில் ஆடைகள் அவிழ்ந்தன
குறுகி நின்றவனை கூட்டிப் போய் சிரம் வருடி
முலை கொடுத்து
அண்ணாந்து பார்த்து நாயே என்றாள்
அவர்களுக்கு நடுவே ஆயிரம் பேர் வேலை பார்க்க
அவர் நாய் நாய் நாய் நாய் என்று
நடுங்கிக் கொண்டிருந்தார்.
என்ன செய்ய வேண்டும் இவர்களை என்று
உறுமியதும் கூடவே கேட்டது
நாய் குரைப்பு வருகிறதோ
எனக்கு
கடவுள் காமிரா கோணத்துக்கு சிந்தித்தார்
கடைசியில் அவளுக்கு போக்கஸ் வைத்தார்
நாயே என்றது கூட சரி
சபை நடுவே பேச்சால்
சல்லாபிக்க ஆகாமல் போகும்போது
இருவரும் கத்திகளால் உரசிக் கொள்வார்கள்
காயம் பண்ணிக் கொள்வார்கள்
குருதி காட்டிக் கொள்வார்கள்
குற்றம் குமைந்து கொள்வார்கள்
பாட்டில் குருதி
பாட்டிலில் குருதி
படுக்கையில் குருதி
பரஸ்பரம் அக்குருதியை மாற்றி மாற்றி
நக்கிக் கொண்டு தாகம் வளர்க்கும் போதெல்லாம்
என்ன ஒரு சீர்கேடு
அவள் கடவுளே என்று திடுக்கிட வைக்கிறாள்
வேறு வழியே இல்லை
உன்னை பத்தினி தெய்வமாக்குவது தான் சரி.
அதற்கு பெரிதாக
மெனக்கெட வேண்டும்
என்பதில்லை
ஈராயிரம் மூவாயிரம் வருஷ துடி நரம்பும்
அதில் பம்மிப் பதுங்கின கொஞ்சம்
ஹிஸ்டிரியாவும் போதாதா?
அவனைப் பிடுங்கினால்
அவள் விறைத்துக் கொள்ளப் போகிறாள்
கட்டிப் போட்ட நாயை
நெருங்கிப் பார்க்கிற சிறுவன்
அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு அதன் மீது
கல்லை வீசுவது போலவே தான்
அவர் அவனிடம் போனார்
கல்லு கனியாவதும்
கள்ளு மதுவாவதும்
கமலாவில் ஆரஞ்சு தெறிப்பதும்
இது எல்லாமும் போயி
எழுத்தில் கால் நீட்டிப் படுக்க
இடம் பிடித்து
பக்கத்தில் அவளுக்கும் ஒரு இடம் வைக்கிற மும்முரம்
வெட்டுப்பட்டது
அவனுக்கு முன்னே சில்லறைகள் சிதறின
பசி தோள் தட்டி போலாமா சகோதரா
என்றது
பசியைத் தெரியுமில்லையா
பிரபலமான ஒருத்தன் தான்
ஒரு கேரக்டர்
உல்லாசமான ஒரு தேசாந்திரி
பலருக்கு நன்றாக தெரியும்
சிலருக்கு கொஞ்சமாக தெரியும்
கேள்விப்பட்டோர் பட்டியல் உண்டு
அப்படி ஒரு ஆள் இல்லை என்று நகைப்போர்
என்று- விட்டுவிடலாம்
பொறுக்கு என்று ஒரு சொல் சொன்னான்
பொறுக்கியாகவே ஆனான் அவன்
அவள் காத்திருந்த போது
அவன் காசுக்கு துயரை விற்றான்
கண்ணீரை இறைக்க காசுக்கு இயந்திரம் வாங்கினான்
இதயம் தொட்டுவிடாத பெரு முலைக்காரிகளில்
தன்னை புதைத்து கழித்தான்
எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு
ஏதுமில்லாமல் கூட்டத்தில்
தொலைந்தான்
அவள் காத்திருந்தாள்
அந்த வானவில் வெளுத்துப் போயிற்று
கடவுளும் எஸ்கேப்
அவரது கணைப்பு முடிந்தது
டிரவுஸரில் சிறுநீர் கழித்த சிறுவன்
ஓடி மறைந்தது போல
ஹீ ஸ் நோ மோர்
என்ன இருந்தாலும் புருஷனல்லவா
இப்போது நான் அவளை பார்த்துக் கொண்டு நின்றேன்.
அவள் என்னிடம் பேசுவதில்லை
என்னைப் பார்க்கும்போது என்னைத்தான்
பார்ப்பதாக நான் நம்புவதுமில்லை
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் நாளும் கொடுத்து இருந்தாலும்
அவள் விண்ணிலிருந்தாள், அவளுடைய
முத்து நவ ரத்தினங்கள் மண்ணில்
இறங்கி விட்டன
தனது யோனியால் அவள் சிறுநீர் மட்டுமே கழித்தாள்
இன்னும் உண்டு
வம்சாவழியாக வந்த தம்பூரா ஒன்றை பரணில் இருந்து எடுத்து
உடைத்துப் பற்ற வைத்து தனது பிள்ளைகளைக் குளிப்பாட்ட
வெந்நீர் வைத்தாள்
முடிந்த நேரத்தில் எல்லாம் பகலில் மட்டுமே உறங்குவாள்
எங்கிருந்தோ கொண்டு வந்த ஒரு ஆமையை பக்கத்தில்
படுக்க வைத்து, கட்டிக்கொண்டு
உலகை எரித்து பொடி பண்ணக்கூடிய
ஒரு தீக்கொள்ளி அவள் கட்சத்தில் இருக்கிறது
அவள் உம் பிள்ளையையோ எம் பெண்ணையோ
கொலைக்கு கொடுக்கும்போது
நம்மால் அதைத் தடுக்க முடியாது
அவள் எப்போதுமே கேட்பது
ஸோ வாட் ?

முற்றும்.

No comments:

Post a Comment