அவளுக்கு எல்லாமே வேறு
ஒருமுறை மட்டுமே பார்த்த
நினைவில் இருந்து மறைந்து போன
காடாம் புழ அம்ம மட்டுமே அவள்
தேவி, ஆங்கிலப் பத்திரிகையில் தட்டச்சு
செய்து ஆயிரங்கள் வாங்கியிருந்தும்
இந்திரா காந்திக்கு அப்புறம் அவளுக்கு
யாரையும் தெரியாது என்பது நூதனமான
பனிப்புகை. ஒரு முத்தம் அவளைக் கவ்விய போது
அதைத் தின்று முடிக்குமளவு சன்னதம்
கொள்வாள், ஆண்டு முடித்து சீறும்நெருப்பில்
ஒளிரக் கூட செய்வாள், ஒளியாமல் நேர்கொள்வாள்
வளர்ந்த யாரையும் மறந்து அவற்றில்
இருந்த அத்தனை சிசுக்களின் முகமும் அறிவாள்
அவளிடம் அறிவதற்கு நாம் அறிந்ததையெல்லாம்
மறக்க வேண்டும் என்பதால்
கொடு மழையில் தீப்பற்றின மரம் போல்
நினைவு வந்து என்னை தேடியிருக்கிறாயா
என்பதைக் கேட்க ஆகவில்லை.
No comments:
Post a Comment