மேடையில் ஒரு காவியம் கிறக்கி
தட்டிக்கு பின்னால் வந்து நின்ற கிருஷ்ணன்
ஊனமுற்ற கால் தொங்க நீல சாயத்தில் முத்திட்ட
துளிகளுடன் பீடி குடித்தான்
இப்போது அவற்றில் மின்னுகிற மஞ்சள் கங்கு
அஸ்தினாபுரத்து தீபங்கள் போல்
ஜோக்கு காட்டுகிறது
அவன் எடுத்த புகை நுரையீரலை
சீண்டி திரும்பியவாறு இருந்த போதிலும்
ஆயிரம் காதம் தூரத்தில்
அந்த காவியத்தில்
அந்த முத்திரையும் முழக்கமும் கூடி வந்த
தங்கத் தருணத்தில்,
முன்னம் ஒரு தினம்
முத்தம் கேட்டபோது இசைந்த காதலியின்
முகக்குறிப்பை இசைக்கிற மனசின் விரல்கள்
போல
அவன் இன்னும் பார்க்கவில்லை
ராஜமாணிக்கம் நெருங்கிக் கொண்டிருக்கிறார்
வட்டி கட்ட வேண்டும்
No comments:
Post a Comment