Thursday, March 9, 2017





தொட்டு விட ஆகாத
தூரத்திலங்கே
பாக்கு மரங்களின் மீது
புகையாய் தெரியும் மழை
நெல்வயலில் நிரம்ப
தோணியிலேகி கடுகி வந்த
மோட்டார் புரையில்
ஜில்லிப்பு

நீரிலிட்ட பழஞ்சோறு
சாளை மீன் குழம்பு

கைமாறி கைமாறி
ஓரிரு தம்மு தான் என்றாலும்
பச்சை காஜாவின் தங்கம் மினுங்க
நுரையீரலில் மேகம் பிதுங்கும் போது
அவை இரண்டும் வரப்பு சேற்றில் பிணைந்து
வழுக்கி இறங்கி
மேலும் இறங்கி
இறங்கி
எனது பாயில் உறங்குகின்றன
அன்றாடம்

சர்ப்ப தோஷம் உள்ள
காலம் சூழும் போது
ஒரு காள் பண்ணு.