Thursday, September 10, 2020

 நீயும் நானும் மட்டுமே இந்த மேஜையில் 

காப்பிக் கோப்பைகளில் எழுந்த ஆவி முடிந்து விட்டது 

ஆறின எதுவும் ருசியை இழந்து விடும் என்பது தெரியாதா 

அது ஆறி விடாது என்கிற பொய்யில் இருக்கிறது 

வாழ்க்கை 

நான் பார்க்கிற இந்த கணத்தில்,

உனது பார்வையின் கூர்மையில் 

முக பாவங்களின் ஆயுதங்களில் 

இதழ்களில் இறங்கி ஏறி மழலை செய்கிற

மனம் என்கிற மகா அசுரனின் 

புதிர் விளையாட்டில்

நான் என்னைக் கடந்த கதைகளை 

வர்ணித்து என்னை விட்டு மேலே எழுகையில் 

அறிவியல் அங்கிருந்து ஒளிந்து விரல் சூப்பட்டும் 

நாம் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிற கணம் நம்முடையது

வெறுமனே பைலில் எழுதி பின் குத்தி வைப்பது அல்ல.

சாகசங்களை செய்பவர்கள் தலைவராக வருவது இருக்கட்டும், சாதாரணர்களை கலைஞர்களாக நெகிழ அனுமதியுங்கள்