Wednesday, May 17, 2017




தானே தன்னைக் கொத்திப் போட்டு
குவித்தாலும் சரியும்
நிற்காத நெடுஞ்சுவரில்
எழுதாத வரிகளிலெல்லாம்
அவர்கள்

காணும் பச்சையில் பச்சையில்லாமல்
தீண்டும் ஒலியில் தொடுவிரலில்லாமல்
சன்னலை வெறிக்கும் பேதலிப்பில்
அவர்கள்

அலையாய் எழுந்து விழுந்து
அழிந்து போகிற கரையோரத்தில்
கவனித்தால் அறிவீர்கள்,
கடலுக்கு இருக்கிறது ஒரு
ஒற்றைப் பெருமூச்சு.

அவர்கள்.

Monday, May 15, 2017



கோழிக் கழுத்தை அறுத்தது பார்த்ததும்
மாமிசம் விட்டேன் என்றெல்லாம் சொல்லவே
வேண்டும்
நெருப்பில் அது பொரியும் போது
நீதி தேவன் மயங்குகிறான்
கொஞ்சம் ஷுகர்
கொஞ்சம் பிரஷர்
தேவைப்படுகிறது கொஞ்சமெல்லாம்
சொகுசு
நீதி தேவனுக்கு சொறிச்சலெடுத்தால்
கோழியுடன் செல்பி
மற்றபடி சிக்கன்
பிராண்டிக்கு சைட் டிஷ்.
கோழி என்று நான் கோழியை
சொல்லவில்லை
நீதி தேவன் என்று
நீதி தேவனை சொல்லவில்லை.