Monday, July 4, 2011

Flash Back

 
 
 
இன்று கொஞ்சம் லஹரி அதிகம்
 
உன்னை பற்றி பேசுவதாய்
நினைத்து
என்னை பற்றி பேசியிருந்தேன்
 
பேசும் தருணத்தில் எல்லாம்
பேச முடியாத இடத்தில் இருக்கிறாய் நீ
 
கூழாங்கல்லில் நகரும் நதிக்கு
உலகம் சிரிக்க
நனைந்த நெஞ்சுடன்
வரளும் அந்நியன்
 
யாரும் அறியா என் பாலையில்
வானவில்லாய் நீ புன்னகைக்கையில்
எப்படி சொல்வேன்?
எத்தனை தனிமை
 
கவிதையில் சிக்காமல்
கண்ணீரில் புலப்படாமல்
நீ ஒளிந்த யுகம் நானறியேன் எனினும்
அதோ அந்த சிறுவனுக்கு
நிலா காட்டி கதையளக்கிறாள் 
அதே நீல பாவாடையில்
இன்றைய சிறுமி.

No comments:

Post a Comment