Monday, July 4, 2011

 
 
 
 
Going Study
 
 
இப்போதும் உன் கண்களை பற்றிதான்
யோசித்து கொண்டிருக்கிறேன்
 
என்றோ ஒரு பால்ய  நாளில்
நிலா கால இரவில் வன்தேவதையாய்
நெஞ்சிடித்து புகுந்தது
அந்த கண்களால் தான்
 
எண்ண தொலையா புதிர்களின் பெருங்கடலில் 
வீசி எறியப்பட்ட கண்ணாடி தொட்டி மீன் 
 
களவாடும் போதும் 
கடவுளாகும் போதும்
வெட்ட வெளி நீள் வானாய் என்னை
வட்டமிட்டு கண்காணிக்கும் 
இரு வேட்டை நாய்கள்
 
கருவறையின்  இதத்தில் 
கண்ணீரின் ருசியை புகட்டி  
பலி பீடம் விரித்து பச்சை இரத்தம் கேட்கிற
சாமியாடிகள்
 
வெறுக்கிறேன்
வெறியோடு விரும்பி தளர்கிறேன்
கொல்ல விரும்பி முத்தமிடுவதில்
நான் நானாகி நிலைத்ததற்க்கு
நன்றி.

1 comment:

Unknown said...

Miha nanraga irukkirathu. Vaazhthukkal.

Anbudan - Francis / Narayanan

Post a Comment