Saturday, June 9, 2012




நசித்து போனதாய்
அடங்கிய எந்தை
கண்ணுக்குள் வைத்து
காக்க ஆகாமல்
பிதுங்கிய அம்மா

செத்தையும் சொத்தையுமாய்
பத்தாயிரம் கூட்டம்

எங்கோ ஹிமாலய அடிவாரத்தில்
பெயரறியா பூவாயிருந்து
குளிரில் நீராடி
ஏதோ சாலை விபச்சாரியின்
யோனியாயிருந்து
வெள்ளைப்படுகிறேன்

ஏய், வெண்ண
உனக்கு தெரியுமா

இனி என்றோ பிறக்க போகிற
குழந்தையின் வீரிடலில் இருக்கும்
என் பசி

Thursday, June 7, 2012






comes with the wind



எத்தனை மகத்தானவள்
நீ
என்பதை உனக்கே
சொல்ல வேணும்

சிருஷ்டிக்க போகிற
காவியம் உன்னை பற்றியது
என்பதையும்

அலைகள் வந்து மோத
துல்லிய நிலவொளியில்
ஜென்னியை பற்றி

சலவை கல்லில் மினுங்கும்
ஷாஜகானின்
கண்ணீர் துளிகள்
பற்றி

அன்னா தஸ்தவேஸ்கியின் 
காதல் பற்றி

சாலமன் மீன்களை பற்றி

இன்னும்! இன்னும்!

தொட்டியில் விட்ட
ரெட்டை மீன்களாட்டம்
மனசு ரெண்டும்
மீட் ஆகி விட்டால்
ஓரிரு முத்தமோ
கொஞ்சம் கண்ணீரோ
அதற்கு பின்னர்
வேறு வழியின்றி
கேட்க வேண்டியிருக்கிறது
நரைத்த ஜீன்ஸில் ,
மொட்டையடித்துக்கொண்டு,
சிகப்பாய்

யார் அவன்?

நற நற நற நற நற  

Tuesday, June 5, 2012




கண்ணுள்
நீ எழுதி கொண்ட கவிதையை
காற்றை வருடி
தெளிந்த பிறகு
மண்ணில் இறக்கி வைத்தால்
மற்றவர்கள் கேட்பர் என்று
விண்ணில் செலுத்தி விட்டேன்
என் கவிதையை
ஏந்தி சென்ற காற்று
எட்டி விட்டதா
உன்னை

அட,போடா
டுபுக்குங்கறியா

சரி இந்த கவிதையை
வேற யாருக்காவது குடுத்து பாக்கறேன்.



வெடி வைத்து பிளந்தால்
பாறைக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

ஒளி கொண்டு புகுந்தால்
இருளுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

பிசையப்படும்போது
மண்ணுக்கு வலியில்லை
யாருக்கு தெரியும்

விருட்சத்தை வைத்திருந்தாலும்
விதைக்கு வலியில்லை என்று பம்மாத்திவிட்டு
வலிகளை பார்த்தால் வாழ்க்கையே இல்லை
ஒர்ரே போடு. 

Monday, June 4, 2012




நீ எப்படி சகிக்கிறாய் என்பதை
சொல்லி கொடு

வசந்தங்களும்
இலையுதிர் காலங்களும் கடக்க
நூற்றாண்டுகள் தாண்டி நீ
எப்படி இப்படி காத்து கொண்டிருக்கிறாய்

மனுஷ்ய இரைச்சல்களும் , தொழுகைகளும்,
கண்மூடிதனங்களும் முடிந்து
நீ நிசப்தயாய் ஆகும்போது
ஜீவவெறியுடன் முணுமுணுக்கிற கானகத்தை
அளவற்ற காதலுடன் நுரைத்து ததும்பி ஓடும் பம்பை ஆற்றின் சலசலப்பை
புணரும் பட்சிகளின் சிறகோசைகளை
எப்படி சகிக்கிறாய்

மேனியை கருங்கல்லாக்கி உறைந்த போதும்
பவுர்ணமிக்கால நிலவொளி ஒரு மயிலிறகாகி வருடும்போது
சிலிர்த்துக்கொள்வது இல்லையா, குறைந்தபட்ஷம்
மனசு

இளைப்பாறுவதற்கு ஒரு நிழல் சோலை வளர்த்து
நெஞ்சுக்குள் வைத்து காப்பாற்றி
ஓய்வெடுக்க வராத ஒரு ஆளின் நிழலுக்கு காத்திருக்கும் போது
உன் யவ்வனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது
காலம்

தேங்காய் உருட்டி
சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்து
இயலாமையை தலையில் சுமந்து
திரும்பி செல்கிறது மானிடம்

மனமெரிய ஒரு பாமரன் கேட்கிறேன்
எப்படி

எப்படி சகிப்பது எல்லாவற்றையும் என்று
சொல்லிக்கொடு   

muthumai...



நான் ஒரு தீர்கதரிசி

வேண்டும் என்று போயிருந்தால்
இந்நேரம் நொறுங்கியிருப்பேன்

நான் ஒரு புத்திசாலி

இப்படித்தான் என்று தெரியாதிருந்தால்
இந்நேரம் என்னை
முடித்துக்கொண்டிருப்பேன்

நான் ஒரு அகங்காரி

மண்டியிட்டு கெஞ்சியிருந்தாலும்
கொடுக்கப்பட முடியாதவைகளை
பெற்றிருக்க முடியாது

இறுதியாக
நான் ஒரு தீவு

என்னில் ஒதுங்குபவர்களும்
தனியாக்கப்படுவார்கள்.

Saturday, June 2, 2012





எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா

எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்

களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்

யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது

ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே

உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்

எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.


Tuesday, May 29, 2012

யார்..?





எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்

நேற்று கழிவறையில் இருந்த போது
கேட்டேன்
வருஷங்களுக்கு முன்னொரு நாள்
கருவறையில் மிதக்கும்போது
கேட்டேன்
உள்ளாடைகளை கூட  சரியாய் அவிழ்க்காமல்
ஒரு வேசியின் யோனியில்
அசைகையிலும்
தான் கேட்டேன்

பசிக்கும் குடல் வெறியின் வழியே
பரிதவித்து பார்த்த பருவத்தின் வழியே
தூங்காமல் செய்த காதலின் வழியே
துக்கித்து அடைந்த பொருட்களின் வழியே
தேடி தேடி வெளியேறினேன்
தேடாத குகைகளில்
கேட்கிறது குரல்

எங்கோ எங்கோ எங்கேயோ
தூரத்தில் தூரத்தில் வெகு தூரத்தில்
அழைத்துக் கொண்டிருக்கிறது
அந்த குரல்





  

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு!




இல்லை,
இல்லயடி என் கண்ணே
நீ மனப்பாடம் பண்ணுவது போல்
அவன் கண்டுபிடித்தது
அமெரிக்காவையல்ல.

பூனைகுட்டிகளோடு
பூனைகுட்டியாகிற
உன்னிடம்
துப்பாக்கிகள் பற்றி
சாட்டைகள் பற்றி
வலி மற்றும் குருதியை பற்றி
சொல்ல அறியேன்

உனக்கு மிகவும் விருப்பமான
அந்த நோஞ்சான் பூனையின் வர்ணம்
எல்லா கடை கோடிகளுக்கும் துரத்தப்பட்டு
காரி உமிழப்பட்ட முகங்களுடன்
இருளில் முடக்கப்பட்ட அரசியல்
புரிந்து கொள்ள முடிவது தானா?

அவன்  கண்டுபிடித்தது
வேறு கண்ணம்மா
வெளுத்த பூனைக்கு
தனியாய் சோறு வைக்காத வரை
உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்

படித்து கொள்-

ஆம், அந்த தேவடியாள் மகன் தான்
அமெரிக்காவை கண்டு பிடித்தான்.



ஏகாந்தம்.

இரு விழிகளென விரிந்த
இவ்வுலகின் எதுவொன்றும்
இதுவென்று தெரியாத
ஏகாந்தம்.

குளிர்முலை கிடைக்காத சிசு
பசி கொண்டழுத பின்னர்
இருள்படியிறங்கியதில்
இதமாக உறங்கும்
ஏகாந்தம்.

நிழலென ஒரு விரல்முனை
நீறுதற்கொரு நீர்த்துளி
வாயுவை புரவி பண்ணி சாடாமல்
காத்திருந்து காத்திருந்து
கரைந்த பின்
ஏகாந்தம்.

பூக்குமொரு மலரின்
புள்ளியை பற்றியேறி
காய்க்கிற புதிரை காதில் பேசும்
நீ என்ன
என் ஏகாந்தத்தின்
எதிரியாகிறாய்,
என் கண்ணே, கண்ணம்மா
நீயேன் எனது கண்ணீராகிறாய்?

Wednesday, May 23, 2012



' தெய்வத்திண்டே விகிர்திகள் ' என்று ஒரு மலையாள படம். லெனின் ராஜேந்திரன் இயக்கியது. ரகுவரன் என்கிற கலைஞன் நடிக்க பின்னணியில்  மதுசூதனன் நாயரின் கவிதை. அதன் அர்த்தத்தை மற்றவருக்கு சொல்ல முடியுமா என்ற ஆற்றாமையில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.  மற்றபடி இதில் பாண்டியத்துவமும் இல்லை. செய்த காரியத்தை நிறைவாய் செய்ய முடியவும் இல்லை. மலையாளம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்.



இருளின் மஹா நித்திரையில்
இருந்து எழுப்பி நீ
நிறமுள்ள ஜீவித பீலி தந்தாய்
எனது சிறகிற்கோர் ஆகாயம்
நீ தந்தாய்
நின் ஆத்ம சிகரத்தில் ஒரு
கூடு தந்தாய்

ஒரு குட்டி பூவிலும்
கடல் காற்றிலும்
நீ நீயாய் மணப்பது
எங்கு வேறு
உயிர் உருகுகையில்
ஒரு துளி தவறாமல்
நீயாகவே நகரும் நதி
எங்கு வேறு
கனவின் இதழாய்
உன்னை பரப்பி
நீ விரிய வைத்த ஒரு ஆகாயம்
எங்கு வேறு

ஒரு குட்டி ராப்பறவை
அழுகிற போதும்
முன்பிருந்த அருவியொன்றின்
தாலாட்டு தளரும் போதும்
கனிவினால் ஒரு கல்
கனி மதுரம் ஆகும் போதும்
உன் இதயத்தில் நான் எனது இதயத்தை
பொருத்தி இருக்கிறேன்
உன்னில் அபயம் தேடி போகிறேன்

முடியாது விலக

முடியாது விலக
உன் இதயத்தில் இருந்து என்னை
எந்த சொர்க்கம் அழைத்தாலும்
உருகி நின் ஆத்மாவின் ஆழங்களில்
வீழ்ந்து ஒளிரும் போது தான் சொர்க்கம்
உன்னில் கரைந்து அழிவது என்
நித்ய சத்தியம்






Tuesday, May 15, 2012

kavthai....kavithai?

சரி சரி
மலைகள்  நிமிராமல் 
பூக்கள்  மலராமல் 
அலைகள் குமுறாமல் 
நிலவு  பொழியாமல் 
எப்படி இது?

ஒரு புன்முறுவலை  தட்டி  விடும்
நகைச்சுவை  திருப்பம் 
இல்லனா அறிவியல் துணுக்கு 
மினிமம் 
விடுகதை  கூட 
இல்லாம?

பெண்  சிரிக்கவில்லை 
இதயம் பிளக்கவில்லை 
எப்டிம்மா?

என்னை 
அஜீரணத்தில்  நெளிய வச்சு 
உன்னை
பசியிலே  இருக்க  வச்சு
அந்த வரிகள்  செல்வது  தான் 
எங்கே?

அடுத்த  யுகத்துக்கா?
நீ உதிர்த்த ஒற்றை சொல்லின் முலை குடித்து தூங்காதிருந்து தூங்கி போன அந்த தினங்களுக்கு திரும்ப விரும்புகிறேன். மயில் பீலி கற்பனை முடிந்திராத அந்த பளிங்கு தினங்களுக்கு.கசடு கலவா கண்ணீர் ஸ்படிகம் தித்தித்த தினங்களுக்கு.வாழ்வின் வீதியில் புருஷனோடும் குழந்தைகளோடும் சலிப்பு வாங்கி திரும்பும் உன்னை சந்திப்பதற்கு முன்னே.

Saturday, April 21, 2012

பெரு வெடிப்புக்கு அப்பால் ஒரு தருணம்,ஒரு கணமேனும் வழுகி இருந்தால் நேராத பிரபஞ்சத்தை குமய்ந்தவாறு அழுக்கை தின்னும் மீனை தின்னும் கொக்கை தின்னும் மனிதனை தின்னும் பசி என்று பொயட்டு கலாய்ப்பானா?
அவிழ்ந்த ஒரு பாறை முடிச்சில் நீர் கொட்டுகின்ற எளிமையான கரடிக்குகையில் ஒருவேளை கடவுள் கூட இளைப்பாறிக்கொண்டு இருக்கலாம். இருந்தாலும் தோஸ்த், இப்ப நான் இருக்கற ஜென்மாந்திர மேஜிக் ஷோ மேடைல இருந்து எறங்குன பெறகு தானே அங்க போவ முடியும்?

புயலில் ஒரு தோணி


காரளக பெண் சிகாமணியே ! நான் மந்தையில் இருந்து விலகி பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும் , பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி , இந்த பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி , ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன் ; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.


சரிதான், சொல்லி என்ன இருக்கிறது? சொல்லி சொல்லி பெருகிய வனத்திலும் எரியத்தானே வேண்டும் அந்த நிலவு?
சரிதான் , சொல்ல என்ன இருக்கிறது? சொல்ல முடியாமல் பெருகிய வனத்தில் எரியட்டுமே அந்த நிலவு?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று நசநசக்கிற உலகத்துக்கு பயந்தால் அப்புறம் முகமூடி தான்.  

Saturday, March 10, 2012

சர்வைவல் ட்டூ பிட்டஸ்ட் - (2)




தரணி

பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யு, ஐ லவ் யு,
ஐ லவ் லவ் யூ,

ன்னு வர்றது, முன்ன வந்த பாட்டு தானே. அத அக்கக்கா பிரிச்சு போட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டுருந்தாங்க. சூப்பர் கவிஞன்னு  ஆளுக்கு ஆளு மாறி மாறி பாராட்டு மழை. வெள்ளையும் சொள்ளையுமா இருந்த அரக்கோணம் கட்சிக்காரருக்கு என்ன ஆச்சிரியம்ன்னா ஒரு வரில பூக்கள்ன்னு வருது. அடுத்த வரில ஈக்கள்ன்னு வருதுன்னார். ரைட்டர் அத கண்டுக்கல. அவுரு பிரம்மாதம்ன்னு சொல்றது 'பூவைத்த பூவைக்கு !' ச், ச், ச், என்று பல்லிசத்தம் போட்டுட்டு எங்கள பாத்தாரு.

நானும் ஸ்டீபனும் ஜட்டியோட ஒரு மூலைல உக்காந்துகிட்டிருந்தோம்.

என்ன பண்றது கஷ்ட காலம் . ரெய்டுக்கு வந்த போலீசுல ஒர்த்தன் ஜமுனாவோட சூத்து மேலே தட்டி பாத்தான். சடார்ன்னு நாங்க ரெண்டு பேரும் கைல கால்ல விழுந்து கத்தவே அவ இப்போதைக்கு தப்பிச்சுட்டா. ஸ்டீபனும், ஜமுனாவும் லவ்வர்சுன்னு நான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேன். மூணு பேரும் சாமி கும்பிட கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ற விஷயமா டிஸ்கஸ் பண்றதுக்கு ரூம் போட்டோம்ன்னு சொன்னேன். டேய், இவன் கிறிஸ்டியன் தானே. இவன் எப்டிடா முருகன கும்புடுவான்னு கேட்டப்ப ஸ்டீபன் எம்மதமும் சம்மதம்ன்னு சொல்லிட்டான். இருந்தாலும் விட்டாங்களா?. லாட்ஜ்ல புடிச்ச பெரிய கூட்டத்தோட சேத்து எங்க எல்லாரையும் கொண்டு வந்து, ஜமுனாவ சபுளுங்க கூட அங்க உங்கார வச்சுருக்காங்க. எங்க ரெண்டு பேரு மேல அடிதடி கேசும், அந்த பொண்ணு மேல விபச்சார கேசும் போட்டாச்சு. சட்டம்ன்னா அப்படிதான். நீங்க நிரபராதிங்கன்னா மூணு பேரும் உங்க பேரன்ட்ச இங்க வரவைங்கன்னு சொல்றாங்க. அது எப்டி, நாலு மணி வாக்குல கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தி சப் ஜெயில்ல போட்ருவாங்களாம்.





ஸ்டீபன் தான் பாவம், தல மேல கைய வெச்சு உட்காந்துக்கிட்ருக்கான்.

தீடிர்ன்னு ஒரு பரபரப்பு. ரெண்டு மூணு வக்கிலுங்க வந்தாங்க. ஏற்கனவே நாங்க அதுக்காக தான் எதிர் பாத்துகிட்டுருந்தோம். டிக்கெட்  பாக்கெட்ல இருக்கற பைசாவ நான் எடுக்கல. மத்தத எல்லாம் ஸ்டீபன் கூட சேந்து அள்ளி குடுத்தேன். ஸ்டீபனோட ரயில்வேகார்ட-ஐ  லாயர் வாங்கி வெச்சுகிட்டாரு. ஏற்பாடு என்னன்னா பணம் நெறைய செலவாவுமாம். இப்போதைக்கு மூணு பேர வெளிய கொண்டு வர்ற செலவ அவரு பாத்துக்குவாரு. வெளில வுட்ட ஒடனே வீட்டுக்கு போயி பணத்த கொண்டு வந்து செட்டில் பண்ணிட்ட பெறகு கார்டு, வாச்சு, மோதிரத்த எல்லாம் வாங்கிக்கலாம்.

ஆனா திங்ககெழம தான் ஜட்ஜ் முன்னால நின்னு மன்னிப்பு வாங்கி விடுதலயாவ முடியும்.

சனி ஞாயிறு ரெண்டு  நாளும் நாங்க ஆம்பள ஜெயில்லையும், ஜமுனா ராணி கிராக்கிங்க கூட பொம்பள ஜெயில்லையும் இருந்தோம்ன்னு சொன்னா போதாதா.


பிரச்சன என்னன்னா எல்லா தலைவலியையும் ஒரு வழியா முடிச்சுகிட்டு ஊரு வந்து சேர்ந்து ஸ்டீபன் அவள அனுப்பி வச்சுட்டு வீட்டுக்கு போயிருக்கான். ஊரே ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டதா பேசறத அப்பாவும் சித்தியும் கேக்க, அவ எங்க போனாளோ, நான் பிரண்டு கூட சித்தூருக்கு போயிருந்தேன்னு வெலாவரியா கத சொல்லிகிட்டிருக்கிறப்ப ஜமுனா ராணி இவன் வீட்டுக்குள்ளயே வந்துட்ருக்கா. அவ வீட்ல அவள வெளிய தள்ளி கதவ சாத்திட்ருக்காங்க.

 



எப்படியும் கொஞ்ச நாளைக்கு அந்த பக்கம் போயி ஸ்டீபன சந்திக்க முடியாது. அந்த பொண்ணு பாவம். இந்த வீட்ட இருந்தும் அவள வெளிய தள்ளி தான் கதவ சாத்திட்ருக்காங்க. ராத்திரியெல்லாம் அவ ரோடுல நின்னுகிட்டுருந்தான்னு பசங்க சொன்னாங்க. இதில நாம பண்றதுக்கு என்ன இருக்கு. குட்டி செயினும், வாச்சும் போச்சு. ஸ்டீபன் வக்கீல பாத்து பணத்த கட்டி கார்டையும் மத்த விஷயங்களையும் வாங்கினா கூட அத எங்க எனக்கு திருப்பி தர போறான்.

எல்லாத்துக்குமா எண்ண தேச்சி தல முழுகி தூங்கிட்டு நாளைலேருந்து அப்பாவுக்கு ஒத்தாசையா பாக்டரிக்கு போவணும்.

ஆ, வ் ! திருத்தணி முருகா. எல்லாரையும் காப்பாத்துடாப்பா.

* * *

ஜமுனா ராணி

அப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பயப்பனை தொழ வினை அறுமே. நான் சொல்ற விநாயக ஸ்தோத்திரம் கரக்டா ? அது விநாயக ஸ்தோத்திரம் தானா ? கர்த்தருக்கு தோத்திரம்ன்னுவாங்களேன்னு யோசிச்சப்ப எனக்கு இது தான் ஞாபகம் வருது. அன்னைக்கு லாட்ஜ்ல தரணி என்ன மல்லாக்க படுக்க வச்சு மேல இருந்து செய்றப்ப கூட எதுக்கோ இந்த வரி மனசுல வந்து போச்சு. என்ன தான் செஞ்சோம்ன்னு ஒரு எழவும் ஞாபகமே இல்ல. இருந்தாலும் குளிக்க ஆரம்பிச்சப்ப எரிச்சல். கடிச்சு வச்சது ஸ்டீபனா தரணியான்னு சரியா புரியல. என் வீட்டுல நானும் அம்மாவும் படுத்துக்கற ரூம்ல தான் இருக்கேன்.

என் எதிர்ல ஒரு இயேசு படம். ஒல்லியா ஒரு மெழுகு வத்தி கெடச்சுது. யாராவது வர்ற டைமா பாத்து அத ஏத்திடறா மாதிரி ரெடியா வெச்சுருக்கேன். அம்புலிமாமா கத புஸ்தகத்துல இருந்து ப்ளேடால கட் பண்ணி எடுத்த படம்தான்னாலும் இயேசு கண்ணு என் கண்ணையே பாக்கறா மாதிரி இருக்கு. இந்த சாமி பவரான சாமியோ. எப்படியோ ஒரு வழியா ஊர் பஞ்சாயத்து முடிஞ்சு ஸ்டீபன் இங்க வர வாய்ப்பிருக்கு.





என் அப்பாவும், அம்மாவும் போயிருக்காங்க. அப்பா டம்மி பீசு தான். இருந்தாலும் அம்மா விழுந்து பொரளாம  இருக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல தளபதி நாராயணசாமிக்கு எங்க குடும்பத்து மேல ரொம்ப அக்கறை. எங்க சைடு என்ன பிராப்ளம்ன்னாலும் அவரு தான் பஞ்சாயத்து ஹெட்டு. எப்படியாவது பேசி ஸ்டீபன என் கழுத்துல தாலி கட்ட வெச்சுருவாருன்னு நெனைக்கறேன். ஒரு வேள திரேசா ஆண்டியும், அங்கிளும் மதம் பத்தி பேசி அடம் புடிச்சாங்கன்னா நான் கிறிஸ்டியனா மாற ரெடி. எங்கம்மாவே கூட அதுக்கு ஓகேன்னா பாருங்களேன். இப்பவே நான் இயேசு படத்தோடயும் மெழுகுவத்தியோடயும் ரெடியா தானே இருக்கேன்?.

சாரு லதா ஓடி வந்தா.

எல்லாமா சேந்து ஸ்டீபன கிடுக்கிப்புடி போட்டுட்டாங்களாம். எப்பவுமே அநீதிய எதிர்த்து கொரல் குடுக்கற ஸ்ரீவத்சன் சார் அவர  அடிக்கவே போயிட்டாராம். கடசியா கத எதுல வந்து நிக்குதுன்னா ஸ்டீபனுக்கு ஒரே ஒரு தடவ என்ன சந்திச்சு பேசணுமாம். நாலே வார்த்த பேசிக்கறேன்னு மக்கள் கிட்ட பர்மிஷன் கேட்டு இருக்காரு.

வீடு நெறைய கூட்டம் புகுந்தாலும் நான் இருக்கற ரூமுக்கு ஸ்டீபன் மட்டும் தான் வந்தாரு.

உஷாரா நான் அந்த நேரத்துக்கெல்லாம் மெழுகு வைத்திய கொளுத்தி, முட்டி போட்டு, ஜெபம் பண்றா மாதிரி கண்ண  மூடிகிட்டேன். மனசுல விநாயக ஸ்தோத்திரம் தான் ஓடுது. அது மிஸ்ஸாவறப்ப லாட்ஜ் விஷயங்க சினிமா மாதிரி.

"ஜமுனா ராணி"

கண்ண தொறந்தேன்.

என் கிட்ட உன்னப் போய் கட்டிக்க சொல்றாங்க. இது நியாமா?

நான் சிலுவை குறிய போட்டு முத்தம் போடறதுக்குள்ள அவுரு ஆத்ரமா  " நீ அப்புறமா நடி !"இப்ப நான் கேக்ற கேள்விக்கு  பதில சொல்லு. உன்ன நான் மட்டுமா செஞ்சேன்? தரணி கூட தானே செஞ்சான்?" ன்னாரு.





"அவுரு உள்ள வுடல "

"ஆங்? என்னது?"

"ஆமா ஸ்டீபன். நான் ரெண்டு தொடையும் இறுக்கிக்கிட்டனா , அவுரு அதிலேயே தான் செஞ்சாரு. காட் பிராமிசா சொல்றன். அவர் கிட்ட நான் என் கற்ப இழக்கவே இல்ல!".

அவுரு ரொம்ப நேரம் என்னையே பாத்தாரு. நான் மறுபடியும் சிலுவை குறி போட  ஆரம்பிச்சவுடனே "ஓத்தா, நீயெல்லாம் நல்லா இருப்பியா?" ன்னு மட்டும் கேட்டாரு.

போயிட்டாரு..

சே, இதுதான் ஸ்டீபன் கிட்ட எனக்கு பிடிக்காத சொபாவம். ஏதாவது விஷயமா, முழுசா பேசவே மாட்டாரு. பாதில பாதில அப்படியே விட்டுட்டு தன் பாட்டுக்கு போயிடுவாரு. என்ன செய்யறது, சின்ன வயசுல இருந்து அதான் அவரு பழக்கமா இருக்கும் போல இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொல்லி நான் தான் அவர மாத்தணும். கல்யாணத்துக்கு அப்றமா.

எங்க கல்யாணத்துக்கு தரணி சார் வருவாரா என்னன்னு தெரியல.

* * *


தளபதி நாராயணசாமி

ஆங் , வணக்கம், வணக்கம், வணக்கம். இருங்க என் புள்ளைங்கள அனுப்பி வச்சுட்டு வந்துடறேன். இவன் மூத்தவன். பத்தாம் கிளாசு. இது சின்னது. ஆறாவது படிக்குது.

நம்ம ஜமுனா ராணிய இவங்கள விட சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். அட, என் மடி மேல உட்கார வச்சு வெளயாட்டு காட்டிருக்கேன்னா பாத்துக்கோங்களேன். அவகிட்ட அந்த ஸ்டீபன் பையன் வெளயாட்டு காமிச்சது தப்பு தான்.





அந்த பையன் ஒரு மாதிரி. அவனால நல்லபடி வளர முடியல. அவனுக்கு ஒன்றர வயசா இருக்கறப்ப அவனோட அம்மா மிஸ்ஸிங். மிஸ்ஸிங்ன்னா அவன தூக்கிகிட்டு ஞாயித்துக்கெழம அப்பா அம்மா ரெண்டு பேரும் சர்ச்சுக்கு போயிருக்காங்க. சர்ச் காம்பவுன்ட்டுக்குள்ள இருக்கற மரத்தடியில கொழந்தைய போட்டுட்டு அந்தம்மா அப்பாவோட பிரெண்ட் கூட ஓடி போயிட்டு இருக்காங்க. இந்த பையன் அப்பவே அனாதையாயிட்டான். ரெண்டாவது அம்மாவா வந்த திரேசம்மா நல்ல மாதிரி. அதாவது அப்படி நடிக்கும். பையனுக்கு அத செய்யாத, இத செய்யாதன்னு அந்த கெழவன தன் பாட்டுக்கு ஆட்டி வைக்கும். நீங்களே சொல்லுங்க, நிக்கறத்துக்கு நிழல் இல்லாம, நிம்மதி இல்லாம ஊர சுத்தி வந்துகிட்டிருந்தான் அந்த பையன், அவனுக்கு இந்த பழி வேற வந்து சேந்தா என்ன நடக்கும்? இருக்கற வேலைய தூண்டிலா போட்டு அவசர அவசரமா ஏதோ ஒரு பொண்ண கட்டி வெச்சாங்க. அதுவும், அவளோட அம்மாவும் சேந்து அன்பா இருக்கறோம், பண்பா இருக்கறோம் அவங்க வீட்லேயே சேத்து வெச்சுகிட்டு, பின்னால ஏதேதோ பழிய சொல்லி கடசியா பொறந்த கொழந்தைய கூட அவனுக்கு காட்டல. அவன் வேற ரயில்வேல திருடி மாட்டிகிட்டானாம். வேல போயி, ஊசி அடிச்சு சுத்திக்கிட்டுருந்தவன் நுங்கம்பாக்கத்துல பிச்ச எடுக்கறப்ப யாரோ பாத்துருக்காங்க. உண்மைய சொல்ல போனா இப்ப அவன் உயிரோட இல்லன்னு தான் நெனைக்கறேன்.

அவன் என்ன சார் பெரிசா தப்பு பண்ணிட்டான். அவனுக்கு எதிரா விதி வேல செஞ்சுருச்சு. லாட்ஜ்காரங்க, அவங்கள புடிச்ச போலிஸ்காரங்க, வக்கீல், மாஜிஸ்டிரெட், எல்லாரும் கூட்டா சேந்து தான் திருத்தணில கொள்ள அடிக்கறாங்க. அது ஒரு தொழிலு. நானெலாம் கூட இங்க பண்றா மாதிரி ஒரு தொழிலுன்னு வெச்சுக்கங்களேன். அதிர்ஷ்டம் கெட்டவன் மாட்டிகினு சாவறான். அன்னைக்கு பஞ்சாயத்து போயிக்கிட்டு இருக்கறப்ப ஜமுனா ராணிய பாத்து நாலு வார்த்த பேச போனவன் இடிஞ்சு போயி என்கிட்டே வந்தான். தனியா கூட்டிகிட்டு போயி சட்டுன்னு என் கால்ல விழுந்திட்டான். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல நான் என் கட்டிங் அமௌண்ட் பத்தி சொல்லவே, கொஞ்சம் கொறச்சுக்கங்கன்னு கேட்டான். அதுக்கு அவன் சொன்ன காரணம் என்னன்னா ஜமுனா ராணி கிட்ட அவன் மனசாட்சியோட தான் நடந்துகிட்டானாம்.







அவன் அவளோட கற்ப சேதாரம் பண்ணவே இல்ல, ஆமா, உள்ள விடாம தொடைல வெச்சு தான்  செஞ்சுருக்கான். இத கேள்விப்பட்ட உடனேயே எனக்கு அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்து, முன்ன சொன்னதுல பாதிய தான் வாங்கினேன். அதுமட்டும் இல்ல ஜமுனா ராணிய நானே கல்யாணம் பண்ணிகிட்டேன்.

என்னன்னா, சின்ன வயசுல மடில உக்கார வச்சு வெளையாட்டு காட்றப்பவே நான் அவள தடவறது வழக்கம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு கட்சி பணி செஞ்சுக்கிட்டுருந்து காசு பண்ணிகிட்ருந்தனா, கல்யாணம் வுட்டு போயிருந்திச்சு. ஸ்டீபன் விஷயம் வந்து அவ பேரே நாறி போய் அவளோட அம்மா அப்பா தெகைச்சு நின்னப்ப நான் பேரம் பேசிட்டேன். சனியன் தொலைஞ்சா போதும்ன்னு நெனைச்சு பத்து பைசா வரதட்சண  இல்லாம எனக்கு கன்னிகாதானம் பண்ணி குடுத்துட்டாங்க. 






இப்ப நாங்க ஒரு கௌரவமான பேமிலி. சார், ரெண்டு பசங்கள பெத்து வளத்து அவ ஒரு குடும்ப தலவியா மிளிர்றத யாரும் பாக்கலாம். ஸ்டீபன் குடும்பத்த பத்தி ஒண்ணும் தெரியலன்னாலும் தரணின்னு ஒர்த்தர் இருந்தார். அவரு இப்ப கூட அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து நலம் விசாரிச்சுட்டு போவார். ரெண்டு பேருமா சேந்து ஒரு பிசினஸ் பண்ண வேண்டியது தானேன்னு நம்ம ஜமுனா ராணி அடிக்கடி கேட்டுகிட்ருக்கா. மனைவி சொல் மந்திரம்ன்னு தானே நம்ம பண்பாடு சொல்லுது. அவ ஆசைய பூர்த்தி பண்ணி வெச்சுட வேண்டியது தான்.

என்ன சொல்றீங்க?